வனை.
|
காரணமின்றி-பிராணநாதா, நாம் எப்பொழுது அந்தத்
துறையைப் பார்க்கப் போவது?
|
பு.
|
அதிருக்கட்டும் - என்னவோ கூறவந்தவள் நிறுத்திவிட்
டனையே, என்ன கூறவந்தாய்? சொல், சொல்.
|
வனை.
|
அதெல்லா மிப்பொழு தெதற்கு?- பிராணநாதா, நாளைத்
தினம் போவோமா அங்கு?
|
பு.
|
கண்ணே, என்னவோ கூறவந்தாய், சொல் அதை ஒளி
யாதே.
|
வனை.
|
ஒன்று மில்லை, காரணமின்றி இவ்வுலகத்தில் எதுவும் பிற
வாது என்று கூறவந்தேன், வேறொன்றுமில்லை- பிராண
நாதா, நாளைத்தினம் போய் நாம் ஜலக்கிரீடை செய்
வோமா?- பிராணநாதா, அதைப்பற்றி யெல்லாம் ஒன்
றும் யோசியாதீர்,- சொல்லும் நான் கேட்பதற்கு,
என்ன பிராணநாதா?
|
பு.
|
என்ன காரண மின்றிப் பிறவாது? நான் எதைப்பற்றி
யோசிக்கிறேன்? வசந்தசேனை, உன் மனதில் ஏதோ
இருக்கிறது, இன்னதென்று சொல்.
|
வனை.
|
ஒன்று மில்லை, பிராணநாதா.
|
பு.
|
இல்லை, ஏதோ இருக்கிறது ! கண்ணே, சொல் ஏன்?
பயப்படுகிறாயா என்ன?
|
வனை.
|
பயமொன்று மில்லை, பிராணநாதா. வதந்தி காரண
மின்றிப் பிறக்குமோ? உலைவாயை மூடினாலும் ஊர்
வாயை மூடலாகுமா? என்கிறார்களே அதைத் தான்
கூறினேன். -அப்புறம், அந்தத் துறைக்குப் போகலாமா
நாளை? சொல்லும் பிராணநாதா.
|
பு.
|
வசந்தசேனை, என்ன வதந்தி?
|
வனை.
|
போம், பிராணநாதா ! நான் கேட்டதற்குப் பதில் கூறாது
என்னென்னவோ யோசிக்கிறீர்கள்.
|
பு.
|
இல்லை, இல்லை ; உன்னிஷ்டப்படி நாளையே போகலாம்.
- அதென்ன வதந்தி சொல்லிவிடு. நான் கேட்பதை
|
|
|
|