|
நீ மறுக்கலாமா? நீ கேட்பதை நான் மறுக்கிறேனோ?
என் கண்ணல்ல, சொல் சீக்கிரம்.
|
வனை.
|
பிராணநாதா, இந்தச் சமாசாரந் தவிர மற்ற சமாசாரங்
களைக் கேளும். இதை மாத்திரம் கேளாதீர், உம்மை
வேண்டிக்கொள்ளுகிறேன். - நான் போய் உமக்கு போ
ஜனம் சித்தம் செய்யச் சொல்லவா?
|
பு.
|
இப்பொழுது வேண்டாம், சற்றுப்பொறுத்தாகட்டும்.-
வசந்தசேனை, இப்படி வந் துட்கார். என்ன வதந்தி?
நான் அதைப்பற்றி யேன் கேட்கலாகாது?
|
வனை.
|
மறுபடியும் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்
கிறீரே, வேண்டாம்-போஜனத்துக்கு வாரும், இன்னும்
நானும் போஜனங் கொள்ள வில்லை.
|
பு.
|
வசந்தசேனை, நீ யெப்படியும் எனக்குக் கூறவேண்டும்.
|
வனை.
|
ஐயோ ! இதென்ன தொந்தரவு ! என் வாய் தவறி ஏதோ
சொல்லிவிட்டேன், பிறகு கஷ்டமாய் முடிந்ததே-
பிராணநாதா, நான் இப்பொழுதே சொன்னேன், அதை
நீர் கேட்பது நியாய மன்று ; நானும் உமக்குச் சொல்லு
தல் நியாயமன்று.
|
பு.
|
வசந்தசேனை, இந்த சமாசாரத்தை முற்றிலும் கூறினா
லொழிய நான் இன்றைத்தினம் போஜனங் கொள்ளேன் !
|
வனை.
|
ஐ ஐயோ ! பிராணநாதா, இதென்ன தர்ம சங்கடம் !
நான் என்ன செய்வது? வாரும் போஜனங் கொள்ள.
|
பு.
|
நான் வரமாட்டேன், சொன்னால் வருகிறேன்.
|
வனை.
|
ஐயோ ! நீர் வாரும், அப்புறம் சொல்கிறேன்.
|
பு.
|
முன்பு சொல், வருகிறேன்.
|
வனை.
|
பிராணநாதா, நான் எல்லா சமாசாரங்களையும் கூறி உமக்
களவற்ற வருத்தத்தையும் அவமானத்தையும் கொண்டு
வரமாட்டேன். உயிருள்ளளவும் இது உமக்குத் தெரியா
|