|
திருப்பதே நலம். வேண்டுமென்றால் இது பத்மாவதியைக்
குறித்த விஷயமென்று மாத்திரம் கூறுகிறேன்.- வாரும்
போஜனங் கொள்ள.
|
பு.
|
பத்மாவதியைப் பற்றிய விஷயமா ! அவளைப் பற்றிய
விஷயமென்ன இருக்கப்போகிறது? -வசந்தசேனை, நீ முற்றிலும்
ஆதியோடந்தமாகக் கூறினாலொழிய நான் வரமாட்டேன்,
ஒரே வார்த்தை !
|
வனை.
|
பிராணநாதா, நீர் என்னைக் கொன்றாலும்
சரி, நான்
ஒருவர் மீது கோள் சொல்லமாட்டேன்.
[ஒரு
புறமாய்ப் போய் உட்கார்ந்துகொண்டு,
மெல்லச் சைகை செய்கிறாள். ]
மெல்ல நீலவேணி வருகிறாள்.
|
நீ.
|
மஹாராஜா, நான் வரலாமோ?
|
பு.
|
என்ன சமாசாரம்?
|
நீ.
|
ஒன்றுமில்லை, தங்க ளிடத்தில் ஒரு நிருபம் கொடுக்க வேண்டி யிருக்கிறது.
|
பு.
|
என்ன நிருபம்?
|
நீ.
|
பெரிய ராணி கொடுக்கும்படி கட்டளை யிட்டார்கள்.
|
பு.
|
உனக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதோ? என்னிடமா? பத்மாவதியா?
|
நீ.
|
ஆம், இதோ பாரும்.
|
பு.
|
இது கனவா?- (படிக்கிறார்.) "சோழ நாட்டுக் கெடிஸ்கலாதிபதி
புருஷோத்தம மஹாராஜாவின் சன்னிதானத்திற்கு"-
பத்மாவதியின் கடிதமா இது?
|
நீ.
|
ஆம்.
|
பு.
|
ஆம். சந்தேக மில்லை. அவளுடைய கையெழுத்து
எனக்கு
ஞாபக மிருக்கிறது ! - என்ன ஆச்சரியம் !
[ பிரித்துத்
தனக்குள் படிக்கிறார். ]
என்ன? இதென்ன இது- கனவு காண்கிறேனா என்ன? -
பத்மாவதியா நமக்கு இப்படி எழுதுகிறாள்? இன்
|