|
னொரு முறை வாசித்துப் பார்ப்போம்- [ மறுபடியும் படிக்
கிறார் தனக்குள். ] சீ ! சந்தேக மில்லை ! இதென்ன விந்தை !
எனக்கா இப்படி எழுதுவது?-
|
வனை.
|
நீலவேணி, ஏன் இங்கு நிற்கிறாய்? போ.
[நீலவேணி அகஸ்மாத்தாய் விழுவதுபோல்
மற்றொரு நிருபத்தைக் கீழே விட்டு, திடீ
ரென்று பயந்தவள்போல் அதை எடுத்து
மறைத்துக் கொள்ளுகிறாள்.]
நீலவேணி, அதென்ன?
|
பு.
|
நீலவேணி, அதென்ன, நிருபமா?
|
நீ.
|
[பயப்படுவதுபோல் நடித்து] ஆம். [போக முயல்கிறாள்.]
|
பு.
|
நீலவேணி ! வா இப்படி, நான் கேட்டுக் கொண் டிருக்கிறேன், எங்கே போகிறாய்?
|
நீ.
|
இல்லை.
|
பு.
|
என்ன நிருபம் அது? - என்ன ! நான் கேட்கிறேன், சும்மா இருக்கிறாய்?
|
நீ.
|
மஹாராஜா !
|
பு.
|
என்ன? சீக்கிரம் சொல் !
|
நீ.
|
[மஹாராஜாவின் காலில் வீழ்ந்து] மஹாராஜா, என்னை மன்
னிக்கவேண்டும். இந்த நிருபத்தைப் பற்றி என்னை ஒன்
றும் கேட்கலாகாது, தம்மை இரந்து வேண்டிக்கொள்ளு
கிறேன். பத்மாவதிதேவி யறிந்தால் எனதுயிர் போய்
விடும் !
|
பு.
|
என்ன ஆச்சரியமாயிருக்கிறது ! பத்மாவதியின் நிருபமா?
எனக்கா? யாருக்கு அது?
|
நீ.
|
மஹாராஜா. தமக் கல்ல, பத்மாவதிதேவி- எனக்கு-
|
பு.
|
எனக் கல்ல ! பிறகு யாருக்கு?
|
நீ.
|
இதை ஒருவருக்கும் வெளியிடலாகாது, வெளியிட்டால்
உனதுயிர் போய்விடுமென்று எனக்குக் கட்டளையிட்
டார்கள் பத்மாவதிதேவி.
|