பக்கம் எண் :

72மனோஹரன்[அங்கம்-3

பு.

நீலவேணி !  கொடு இப்படி அந் நிருபத்தை ! 

நீ.

மஹாராஜா !  எனதுயிர் போனாலும் நான் கொடுக்கமாட்
டேன் !  என்னை மன்னிக்க வேண்டும். என்னை இதுவரை
யில் காத்து ரக்ஷித்த தேவிக்கு நான் ஒருகாலும் து
ரோகம் செய்யேன் !  மஹாராஜா !  மஹாராஜா ! 

பு.

நீலவேணி !   [ வாளை உருவி ]  அந்நிருபத்தை நீயே கொடுக்
கின்றையா அல்லது உன்னைக் கொன்று எடுத்துக்
கொள்ளவா?

நீ.

மஹாராஜா !  தாம் எப்படியாவது என்னுயிரைக் காப்
பாற்றவேண்டும். ஐயோ !  என்னுயிர் போனாலும் வேறெவ
ருக்கும் காண்பிப்ப தில்லையென்று பிரமாணம் செய்
திருக்கிறேனே ! 

பு.

கொடு இப்படி !  [ பிடிங்கிக்கொண்டு ] "மந்திரி சத்தியசீலர்
அவர்களுக்கு"-                  [பிரித்து வாசிக்கிறார்.] 

"எனது பிராணநாதர் அவர்களுக்கு" என்ன ! 
               [திடுக்கிட் டெழுந்து நிருபத்தை விரைவில்
                  தனக்குள் வாசித்துப் பார்த்து அதிக
                  கோபத்துடன் கிழித் தெறிகிறார்.] 
போ !  என் முன் நில்லாதே ! 

                [நீலவேணியைப் பிடித்து அறைக்கு வெளி
                  யாகத் தள்ளிவிட்டு, மஞ்சத்தின்மீது
                  சாய்கிறார். ] 

வனை.

பிராணநாதா !  பிராணநாதா !  இதென்ன? இதென்ன
மஹாராஜா ! 

பு.

வசந்தசேனை !  என்னை இனி மஹாராஜாவென் றழை
யாதே !  நான் இனி அப்பெயரை வகிக்கத் தக்கவ
னல்லன்.

வனை.

என்ன இது பிராணநாதா? ஏதோ நீலவேணி நிருபம்
கொண்டுவந்து கொடுத்தாள் ;  அதைக் கிழித் தெறிந்து
விட்டு இவ்வாறு துயரப்படுகிறீரே!  என்ன சமாசாரம்?
என்ன நிருபம்? என்னிடங் கூறலாகாதா?