பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்93

வது நியாயமன்று-எடும் வாளை !  புருஷோத்தமராஜனே ! 
காத்துக்கொள்ளும் உமது தலையைச் சௌரியமிருந்தால் !  

                 [சிம்மாசனத்தின் மீது பாய்ந்து வாளை
                     யோங்குகிறான். சபையோருக்குள்
                     பெருங்குழப்பமும் ஆரவாரமுமுண்
                     டாகிறது. ] 

       மறைந்திருந்த பத்மாவதி வேகமாய் வருகிறாள்.

ப.

[மனோஹரன் கரத்தைப் பிடித்துக்கொள்ளுகிறாள் ; முக்காடு நழுவி
முகம் விளங்குகிறது.] மனோஹரா !  நில் ! விடு வாளை ! 

எல்லோரும்.   பத்மாவதிதேவி !  பத்மாவதிதேவி ! 

ம.

அம்மா !  இங்கெங்கு வந்தீர்கள்? அங்கல்லவோ இருந்
தீர்களென்று பார்த்தேன் !  இங்கே ஏது வந்தது?

ப.

அதெல்லா மிருக்கட்டும், விடு வாளை !  நீ எனக்கு வாக்
களித்த தென்ன, இப்பொழுது செய்யத் துணிந்த
தென்ன? விடு வாளை ! 

ம.

அம்மணி !  இப்பொழு தென்னை மன்னிக்கவேண்டும்.
இவ்விருவரையுங் கொன்றே என் வாளை விடுவேன் ! -
புருஷோத்தமராஜனே !  எங்கே நழுகப் பார்க்கிறீர்?

ப.

மனோஹரா !  என்ன, உன்னையும் மறந்து பேசுகிறாய் ! 
விடு உடனே வாளை ! 

ம.

அம்மணி !  சற்று முன்பாக மஹாராஜா கூறியதைக்கேட்
டீரா நீர்? இதோ இவர்களிருவரையும் க்ஷணப்பொழு
தில் கொன்று, நமக்கு இவர்களிழைத்த தீங்கிற்கெல்லாம்
பழி வாங்குகிறேன். இதோ உமது கண்முன்பாகவே ! 
சற்று ஒதுங்கி யிரும்? என் முன் நிற்கவேண்டாம் ! 

ப.

நீ இந்த வாளைக் கொடுத்துவிட்டுப் பின் சென்றாலல்லா
மல் நான் இவ்விடத்தை விட்டுப் பெயரேன் ! 

ம.

அம்மணி !  சுத்தவீரனாகிய நானோ முன் வைத்த காலைப்
பின் வாங்குவேன்? மானமாகிய ஆபரணத்தையே முத
லாகக் கொண்ட நானோ என்னை இழிவாகப் பேசியவர்
களைச் சும்மா விட்டுவிடுவேன்?