| ப.
|
மனோஹரா, என் சொற்படி கேளாய் நீ, எனக்குச்
செய்த வாக்குத் தத்தத்தை மறந்தனையோ?
|
| ம.
|
அம்மா ! அதை யெல்லா மிப்பொழுது நான் யோசிக்க
மாட்டேன். இப்பொழுது நீர் என்னைத் தடுப்பதிற் பய
னில்லை ! ஒதுங்கி யிரும் சற்றே !
|
| ப.
|
மனோஹரா ! என் சொல்லைக் கேட்கமாட்டாய் நீ?
|
| ம.
|
கேளேன் இப்பொழுது மும்மூர்த்திகள் வந்து தடுத்த
போதிலும், என் பகையை முடித்தே மறுவேலை பார்ப்
பேன் !
|
| ப.
|
நீ என் குமாரன் என்பது உண்மையானால் விடு வாளை !
|
| ம.
|
அம்மணி ! இதென்ன இது?
|
| ப.
|
மனோஹரா ! உனக்கு என் சொற்படி நடக்க இஷ்டமில்
லாதிருக்குமாயின், முதலில் உன்னைப் பெற்ற தாயாகிய
என்னைக் கொன்ற பிறகே நீ அங்கு செல்வாய் ! உன்னைப்
பெற்ற உதரத்தின் உதிரத்தில் உன் வாளைத் தோய்த்த
பிறகே மஹாராஜாவிடம் நீ அணுகுவாய் ! அப்படி உனக்
கிஷ்ட மிருந்தால்-இதோ நிற்கிறேன்-நான் பெண்பால்,
உன்னை யீன்ற பேதை-என்னை முதலிற் கொன்றுவிட்டு
பிறகு ஒரு அடி யெடுத்து வைப்பாய் ! -உம் ! ஏன்
யோசிக்கிறாய்? கொல் என்னை முன்பு ! இதற்குத் தானே
உன்னைப் பத்து மாதம் சுமந்து வருந்திப் பெற்றேன் !
|
| ம.
|
[ பாதத்தில் வீழ்ந்து கதறிப் புலம்பி ] அம்மணி ! அம்மணி !
என்ன வார்த்தை சொன்னீர்கள் ! ஐயோ ! இதையும்
உமது வாயினின்றும் நான் கேட்க வேண்டுமா? அம்மா !
என்னை உயிருடன் கொல்கிறீர்களே உமது மொழியால் !
மஹாராஜா என்னைக் கொல்லப்பார்த்தார், நீர் என்னைக்
கொன்றே தீர்த்து விடுகிறீர்கள் ! ஒரு வார்த்தை சொல்
லுமே, ஒரு க்ஷணப்பொழுது எனக்கு விடையளியுமே !
அதற்குள் இவர்களிருவரையுங் கொன்று, என் மானத்
|