|
|
தைக் காப்பாற்றிக் கொள்ளுகிறேன் ! ஐயோ ! வெற்றி
வீரனாகிய மனோஹரன் இவ்வசையைக் காதாரக்கேட்டும்
சும்மா பொறுத்துக் கொண்டிருந்துவிட்டான் என்று
எல்லோரும் ஏளனம் செய்வார்களே நாளை ! அம்மணி !
அம்மணி !
|
| ப.
|
மனோஹரா ! அப்படி ஒருகாலும் ஏளனம் செய்யமாட்
டார்கள் மூவுலகையும் வெல்லும் வல்லமையுடைய
மனோஹரன், தன் தாயார் சொற்படி நடந்தானெனப்
புகழ்வார்கள் ! மனோஹரா, இனி நான் பன் முறை
உனக்குக் கூறமாட்டேன், நீ என் பிள்ளை யென்பது
உண்மையானால் எழுந்திரு உடனே !
|
| ம.
|
அம்மணி !
[எழுந்திருக்கிறான். ]
|
| ப.
|
என் சொற்படி நடக்கிறாயா, மாட்டாயா? நீ என் மகனா
அல்லவா?
|
| ம.
|
என்ன உமது சொற்படி நடப்பது?
|
| ப.
|
உனது வாளை இப்படிக் கொடு.
|
| ம.
|
இதோ !
[வீசி
எறிகிறான். ]
|
| ப.
|
மனோஹரா ! உனக்கென்ன அவ்வளவு அவமரியாதை?
|
| ம.
|
அம்மா, இப்பொழுதாவது ஒரு வார்த்தை சொல்லும்,
நிராயுதபாணியாய் இப்படியே இவர்க ளிருவரையும்
கசக்கிப் பிழிந்து விடுகிறேன் !
|
| ப.
|
அதெல்லாமிருக்கட்டும் ! என் சொற்படி கேட்கின்றாயா
மாட்டாயா?
|
| ம.
|
தீர்ந்ததே, இன்னும் மென்ன?
|
| ப.
|
நீ மஹாராஜாவின் சொற்படி நடக்கவேண்டும்.
|
| ம.
|
மஹாராவின் சொற்படி நடப்பதாவது ! அவர் சொற்
படி நடப்பதென்றால் நான் இறக்க வேண்டியதுதான் !
|
| ப.
|
ஆம் ! - உன்னை யிறக்கும்படியாகத்தான் சொல்லுகிறேன்.
மஹாராஜா அவ்வாறு கூறிய பிறகு, நாமிவ்வுலகில் இருப்
பது நியாயமன்று. அவர் சொற்படி நீ இறப்பாய்-
|