| | நானும் விஜயாளும் இதோ அக்னிப் பிரவேசமாகி உன்னை வந்து சேர்கிறோம்- அஞ்சாதே !
|
| ம. | அம்மணி ! என்னை இறக்கும்படியா சொல்லுகிறீர்கள்!
|
| ப. | ஆம்.
|
| ம. | அம்மா ! உம்முடைய வாயால்- என்னை இறந்து போகும் படியா சொல்லுகிறீர்கள்?
|
| ப. | ஆம்.
|
| ம. | ஆம் ! -சரி, இனி உயிர் வாழ்வது நியாயமன்று-சத்திய சீலரே ! என் பிரக்ஞை தப்பும் போலிருக்கிறது ! நான் மூர்ச்சையா யிருக்கும்பொழுதே என்னைக் கொன்று விடும்- உமது கையால் ! [ மூர்ச்சையாகிறான். ]
|
| எல்லோரும். | ஹா ! ஹா ! [கண்ணீர் விடுகின்றனர். ]
|
| ப. | சத்தியசீலரே ! மனோஹரனை மூர்ச்சையா யிருக்கும் பொழுது கொல்வது தர்மமன்று ; பிரக்ஞை வந்தவுடன் நமது அரண்மனைக் கொத்தளத் தருகிற் கொண்டுபோய்- கொன்று விடும் !
[தன்முகத்தை மூடி விரைந்து வெளி யிற் செல்கிறாள்.-சபையில் ஆரவார முண் டாகிறது - புருஷோத்தமன் வசந்தசேனையை ஒரு புறமாகத் தள் ளிவிட்டு மற்றொரு புறமாகப் போகி றார். தலைசாய்த்தவண்ணமாய் வசந் தசேனை பின்தொடருகிறாள். சபை கலைகிறது. ]
காட்சி முடிகிறது.
|