| ஐந்தாம் காட்சி.
இடம்- கோட்டைமதில். காலம்-நள்ளிரவு.
புருஷோத்தமன் ஓர் சேவகனைப்போல் வேஷம்பூண்டு
அரங்கத்தின் ஓர் புறத்திலிருந்து வருகிறார்.
| | பு. | என் மனம்போலவே இன்று ஆகாயமெல்லாம் இருண் டிருக்கிறது ! ஆஹா ! நான் என்ன தப்பிதம் செய்ய விருந்தேன் ! பதிவிரதையாகிய பத்மாவதியின்மீது பழி சாற்றி, என் மைந்தனாகிய மனோஹரனைக் கொல்ல விருந் தேனே ! பத்மாவதி வந்து தடுக்காவிட்டால் நான் இன்று மனோஹரன் வாளால் இறந்திருப்பேனென்பது நிச்சயம் ! எனக்குத்துரோகம் செய்திருப்பவளாயின், நான் அவளை இந்தப் பதினாறு வருடங்களாகப் பிரிந்திருந்தது மன்றி, எவ்வளவோ தீங்கிழைத்தற்கு, என்னைக் கொல்லும்படி யல்லவோ கட்டளையிட்டிருக்கவேண்டும் ! -இது தான் குறித்த இடமென்பதற்குச் சந்தேகமில்லை இருளில் எனக்கொன்றும் தெரியவில்லை ; எப்படியும் நான் மனோ ஹர னுயிரைக் காப்பாற்றவேண்டும் ! ஐயோ ! நான் மஹாராஜாவாயிருந்தும் நேரிற் சென்று இதைக் கூற மன வுறுதி இன்றி, இவ்வேடந்தரித்து, ஒற்றனைப்போல் என் மைந்தன் முன்னே நான் செல்லும்படி நேரிட்ட தல்லவா? ஆம், ஆம் ! மனோஹரன் முகத்தை நான் இவ் வளவு தூரம் எல்லாம் நடந்துவிட்ட பிறகு, எப்படி ஏற நோக்குவது? அதோ வருகிறார்கள் ! அவர்கள் தான் போல் தோற்றுகிறது-மனோஹரனும் சத்தியசீலனுந் தான் ! சந்தேகமில்லை. நான் ஒளிந்திருந்து இவர்கள் என்ன பேசிக்கொள்ளுகிறார்களெனக் கண்டறிந்து பிறகு சமயத்தில் இவ்வோலையையும், கணையாழியையுங் கொடு த்து மனோஹரன் மடியாவண்ணம் செய்யவேண்டும் ; இதோ வந்து விட்டார்கள் ! [ஒரு புறமாக மறைந்து நிற்கிறார்.] 13
| |
|
|