பக்கம் எண் :

98மனோஹரன்[அங்கம்-3

   மனோஹரனும், சத்தியசீலரும் வருகிறார்கள். 

ச. அரசே, வேறு வழியில்லையா இதற்கு? என் கையினாற்
றான் கொல்லவேண்டுமோ உம்மை?

ம. என்ன மறுபடியும் பழையபடி ஆரம்பித்தீர்? வேறு வழி
யில்லை, முடியும் உமது வேலையை !  நான் உமக்குத் தீங்கு
செய்வேன் என்றஞ்சவேண்டாம் ;  மனோஹரன் உயிருட
னிருக்கும்பொழுது ஒருவனுக்கும் அஞ்சினதில்லை,
இறப்பதிலும் ஒருவருக்கும் அஞ்சா திறக்கப் போகி
றேன், பாரும் ! 

ச. அரசே !  என்னுடைய கரத்தால் உமது சென்னியை
நான் எவ்வாறு சேதிப்பது? எனக்கு மனம் எப்படி
துணியும்? கைதான் எப்படி எழும்? ஐயனே !  மற்றெல்
லோருமிருக்க பாவி என் கரம்தான் இம்மஹாபாதகத்
தைப் புரியவேண்டுமோ? இதற்கென்றோ நான் இப்புவி
யிலுதித்தேன்?                   [வருந்துகிறார். ] 

ம. ஐயா !  இவைகளை யெல்லாம் குறித்து இப்பொழுது
வருந்திக்கொண்டிருப்பதற்குக் காலமில்லை நேரமாய் விட்
டது !  என் மன வுறுதியைக் கலைக்காதீர் !  சீக்கிரம் !  

ச.  ஈசனே !  ஈசனே !  இதுவும் உமது திருவிளையாட்டோ !
                           [கண்ணீர் விடுகிறார்.]  

ம. என்ன ஐயா !  அழுதுகொண்டிருக்கிறீர்கள் !  எடும்
வாளை !  என்னைக் கொல்கிறீரா என்ன இப்பொழுது?

ச. அரசே, உமது கட்டளைப்படியே ஆகட்டும். ஆயினும் நீர்
இறப்பதன்முன் எனக்கு ஒரு வரம் கொடுக்கமாட்டீரா?

ம. ஐயா !  நல்ல சமயம் பார்த்தீர் என்ன வரம் கேட்க !  இப்
பொழுது தமக்குக் கொடுக்கும்படியாக என்னிடம்
என்ன இருக்கிறது? என்னால் இந்த ஸ்திதியில் கொடுக்க
முடியுமானால் கொடுக்கிறேன். சீக்கிரம் கேளும், கால
மாய் விட்டது, இறப்பதனால் நான் சீக்கிரம் இறக்க
வேண்டும் !