பக்கம் எண் :

காட்சி-5]மனோஹரன்99

ச. அரசே, நான் வாளை வீசி யுமது சென்னியை வாங்கும்
பொழுது நீரும் உமது வாளை வீசி எனது கந்தரத்தையும்
வெட்டுவதாக வரமளியும் ! 

ம. என்ன !  நான்தான் இறக்கவேண்டும், என் விதி !  உமக்
கென்ன? நானாவது உம்மைக் கொல்வதாவது !  ஒரு
காலும் மாட்டேன்.

ச. அரசே, தாம் எனக்கு வரமளித்தபின் பின்வாங்குவது
நியாயமன்று ;  நீர் இறந்தபின் உம்மைக் கொன்ற கொடும்
பாவியாகிய நானோ உயிர் வாழ்ந்திருப்பேன்? அப்படி
யிறப்பவன், தம்முடைய கரத்தால் இறப்பேனாயின் என் ஜன்மம்
புனிதமாகும், அவ்வளவே நான் வேண்டிக்கொள்வது.
அரசே !  உமக்காக நான் சிறுவயதுமுதல் பாடுபட்டதற்காக
தாம் இவ்வளவு செய்யலாகாதா?

ம. [கட்டி யணைத்து ]  சத்தியசீலரே !  மெச்சினேன் உமது
பேரன்பை !  உம்மைக்கொல்ல எனக்குச் சிறிதும் மனமில்லை ; 
ஆயினும் நீர் வேண்டுவதை மறுக்கலாகாதென
விடன்பட்டேன். எடும் வாளை ! 

ச. அரசே, நாமிருவரும் நமது கோரிக்கையைக் கூறி யிறப்போம்.
உமது நிச்சயமென்ன?

ம. [வாளை  வீசி] என்னைப்பெற்ற தாய்தந்தையரன்றி எனக்குப்
பிறிதொரு தெய்வமில்லை !  சுத்த வீரமே என்றும்
நிலைத்திருக்குமாக ! 

ச. [வாளைவீசி]  பிறருடைய நன்மைக்காக வாழ்வதே மாந்தர் கடமை !  சத்தியமே என்றும் நிலைபெற்றிருக்குமாக !
                    [ இருவரும் வாளை ஓங்குகிறார்கள். ] 

மறைந்திருந்த புருஷோத்தமராஜன் வேகமாய்

                  வெளியே வருகிறார்.

பு. [இருவருக்கும் இடையில் நின்று ]  பொறும் !  பொறும் ! 

இருவரும். யார் அது?