பக்கம் எண் :

100மனோஹரன்[அங்கம்-3

பு. [குரலை மாற்றி ]  நான் ராஜாவினால் அனுப்பப்பட்ட சேவ
கன். அவர் முன்பு இட்ட கட்டளையை மீட்டுக்கொண்ட
தாகக் கூறி, இளவரசர் இறவாதிருக்கும்படி தடுத்து,
இவ்வோலையையும், தன் அடையாளமாக இக்கணையாழி
யையும் கொடுக்கச் சொன்னார்.

ச. அரசே !  இது மஹாராஜாவின் முத்திரை மோதிரந்தான்
சந்தேகமில்லை. இவ்வோலையிலென்ன எழுதியிருக்கிறது
பார்ப்போம் ;  இருளில் ஒன்றும் தெரியவில்லை !  அரசே ! 
எப்படியாவது தெய்வாதீனத்தால் நீர் உயிர்பிழைத்தீரே !
 
           ராஜப்பிரியன் வருகிறான்.

ரா. யார் அங்கே?

ம. யார் அங்கே? ஓர் பந்தத்தை யெடுத்துக்கொண்டு வரு
கிறான். ராஜப்பிரியனா?

ரா. அரசே, எம்மை உயிருடன் காணப்பெற்றேனே ! -
இது என்ன சத்தியசீலரே?
                   [புருஷோத்தமராஜன் மறைந்து
                      விடுகிறார். ] 

ச.  ராஜப்பிரியரே !  கொடும் அப்பந்தத்தை இப்படி !  அப்
புறம் எல்லாம் சொல்லுகிறேன். [ படிக்கிறார். ]  "மந்திரி
சத்தியசீலருக்கு, முன்பு யாம் உமக்கிட்ட கட்டளையை
மீட்டுக்கொண்டோம். மனோஹரனைத்தாம் கொல்லவேண்
டியதில்லை. புருஷோத்தம சோழன்"-அரசே சிரஞ்சீவி
யாக வாழ்வீராக ! 

ரா. ஆம் !  ஆம் ! 

ம. ராஜப்பிரியா, உனக் கென்ன பயித்தியம் பிடித்துவிட்
டதா என்ன? என்ன குதிக்கிறாய் !  பந்தத்தை யவித்து
விட்டனையே ! 

ரா. இனி அதற்கு வேலை யில்லை. உமதுடலிருக்கு மிடத்
தைக் கண்டு நானும் உயிர் விடலாமென்று தேடக்
கொண்டுவந்த பந்தம், நீர் உயிர் பெற்றதைக் கண்டபின்
எதற் குபயோகம்?