பக்கம் எண் :

காட்சி-6]மனோஹரன்101

ச. எங்கே இதைக் கொண்டுவந்த சேவகன்?- எங்கும்
காணோம், எங்கேயோ போய்விட்டான் ! 

ம. ராஜப்பிரியா, மஹாராஜா ஏன் இவ்வாறு தன் கட்ட
ளையை மீட்டுக்கொண்டா ரென்று எனக்கு வருத்த
மாகவே யிருக்கிறது !  நான் இறப்பதே நலம் !  நானினி
உயிர் வாழ்வானேன்?

ரா. இதென்ன அரசே மறுபடியும்?

ம. நான் ஒரு காலும் இப்பட்டணத்துட் பிரவேசியேன் இனி.

ரா. வேண்டாம் ;  வாரும், நாம் மூவரும் இப்படியே புறப்
பட்டு மாறுவேடம் பூண்டு தேசசஞ்சாரம் செய்வோம்
சிலகாலம் ;  என்ன சொல்லுகிறீர்களிதற்கு ! 

ச. ஆம், அரசே ;  இதுவே நல்ல யோசனை.
                       [மூவரும் போகிறார்கள். ] 

                  காட்சி முடிகிறது.


                  ஆறாம் காட்சி.

   இடம் : - பத்மாவதியின் அறை.       காலம்-இரவு.
         பத்மாவதியும் விஜயாளும் வருகிறார்கள்.

வி. மாமி, நான் சொல்வதை நம்புங்கள். என் பிராண
நாதர் உயிரோடுதா னிருக்கிறார் ;  இறக்கவில்லை. தாம்
ஒன்றும் அவசரப்பட்டுச் செய்துவிட லாகாது. அக்
கினிப் பிரவேச மாவதற்குச் சித்தஞ் செய்து வைத்தி
ருந்த தீயை அவித்துவிடும்படி கட்டளை யிட்டுவிட்டு
வந்தேன். தாம் இனி ஒன்றுக்கும் வருத்தப்பட
வேண்டாம்.

ப. விஜயா, நீ சொல்வதொன்றும் எனக்கு நன்றாக விளங்க
வில்லை. மனோஹரன் இறக்கவில்லை யென்று உனக்
கெப்படி உறுதியாய்த் தெரியும்?