| வி. | மாமி, எல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும் ; என் னிடந்தா னிப்பொழுது இறப்பதில்லை யென்று வாக் களித்தாரே, இதினின்றும் தவறுவாரோ?
|
| ப. | இதைக்கொண்டோ இறக்க வில்லையென்று கூறிவிட் டாய்?
|
| வி. | இல்லை மாமி, உட்காருங்கள். இறந்திருந்தால் அவ ருடைய உடலெங்கே? நீங்கள்தான் கொத்தளங்களிற் போய்ப் பார்த்தீரே, அகப்பட்டதா?
|
| ப. | ஆம்,-சத்தியசீலரைக் கேட்கலாமோ வென்றால் அவரை யுங் காணோம்.
|
| வி. | ராஜப்பிரியரையுங் காணோம்.-மாமி இவர்கள் மூவரும் எங்கேயோ போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன். நீர் ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்.
|
| ப. | மனோஹரன் இவ்வளவு காரியமெல்லாம் நடந்த பிறகு எப்படி உயிர்பிழைத் திருப்பான்? ஆயினும் இம் மூவர் களையுங் காணாதிருப்பது சந்தேகத்திற்கு இடங்கொடுக் கிறது. [தனக்குள் ] விஜயாளைக் கேட்பதில் பிரயோஜன மில்லை, அவளுக்கு ஒன்றும் தெரியாது.
நீலவேணி வருகிறார்.
|
| நீ. | அம்மா, மஹாராஜா வாயில் வந்திருக்கிறார் ! தம்மைப் பார்ப்பதற்காக உள்ளே வரலாமா வென்று கேட்டுக் கொண்டு வரச்சொன்னார் !
|
| ப. | யார்? மஹாராஜாவா?
|
| நீ. | ஆம் அம்மா, உண்மையாகத்தான். அம்மணி, இனி 'நீங் களும் அவரும் ஒருமித்த மனமுடையவராய்ச் சுகமாக வாழ்வீர்களாக ! ஏதோ மஹாராஜாவினுடைய மனம் திரும்பி யிருக்கின்றதென்பதற்குத் தடையில்லை?
|
| ப. | மஹாராஜா என்னை இங்குப் பார்ப்பதாவது !
|
| நீ. | ஆம், அம்மணி, நான் அவரை உள்ளே வரச்சொல்லவா?
|