பக்கம் எண் :

காட்சி-6]மனோஹரன்103

ப. வேண்டாம் !  இப்பதினாறு வருடங்களாக என்னைப்பாரா
தவர் இவ்வளவு தூரம் நடந்தபின்பு இனிமேல் பார்க்
கப்போகிறாரோ? வேசியாகிய என்னை அவர் பார்க்க
வேண்டிய நிமித்த மில்லை. ஒருவேளை வழிதவறி வந்தி
ருப்பார். அவளுடைய மாளிகை தென் பாரிசத்தி
லுள்ள தென அதற்கு வழி காட்டு, போ ! 

நீ. அம்மா, இதென்ன? அவராக வேண்டி வரும்பொழுது
தாமிப்படி பிடிவாதம் செய்யலாமா?

ப. நீலவேணி ! நான் சொன்னபடி சொல், போ !
                         [நீலவேணி போகிறாள். ] 

இதென்ன ஆச்சரியமா யிருக்கிறது !  மஹாராஜா இங்கு
வருவானேன்? இதிலெல்லாம் ஏதோ இருக்கிறது.-மனோ
ஹரன் உயிருடன் இருக்கிறானென எனக்குள் ஏதோ
சொல்லுகிறது !  அவ்வண்ணம் தப்பியிருந்தால் நம்மிடம்
வந்து சொல்லாமல் எங்கேயாவது போயிருப்பானோ?

        நீலவேணி மறுபடியும் வருகிறாள்.

வி. அம்மா, நான் என்ன சொல்லியும் போகமாட்டேனென்
கிறார். எப்படியாவது தம்மைக் காணவேண்டு மென்
கிறார். வரச் சொல்லவா? அம்மா, அவர் அவ்வளவு
வேண்டிக் கேட்கும்பொழுது தாம் பாராதிருத்தல்
தர்மமோ?

ப. நீலவேணி !  நீ எனக்கு தர்மம் கூறவேண்டியதில்லை. என்
னையும் என் மைந்தனையும் இக்கோலங் கண்டவர் என்
னைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை !  உலகம் நகைக்
கும் போநீ !  என்முன் நில்லாதே. [ நீலவேணி போகிறாள். ] 

வி. மாமி, மாமாவாக வந்து இவ்வளவு கேட்கும்பொழுது
தாம் பார்க்கிறதுதானே? இதிலென்ன தவறு? என்
பிராணநாதர்தான் பிழைத்து விட்டாரே ! 

ப. எப்படித்தெரியு முனக்கு நிச்சயமாக? விஜயா, நீ சற்
றுப் பேசாமலிரு.