|  வி. 
       | 
     என்ன 
      மாமி? ஒரு வேளை பிராணநாதர் சமாசாரம்  
      தான் ஏதாவது சொல்ல வந்திருக்கிறாரோ என்னவோ?  
      உள்ளே வரவழைத்துக் கேட்கிறதுதானே? தம்முடைய  
      புருஷனைத் தாம் பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது? 
       
        | 
  
   
    |  ப. 
       | 
     விஜயா, 
      நீ ஒன்றும் அறியாதவள் ;  இவ் விஷயங்களி  
      லெல்லாம் தலை நுழைத்துக்கொள்ளாதே- 
       
               மறுபடியும் நீலவேணி 
      வருகிறாள். 
       
        | 
  
   
    |  நீ. 
       | 
     அம்மா !  
      தாம் கூறியதைச் சொன்னேன். அவர் உட 
      னே யிருந்த விடத்திலேயே உட்கார்ந்துகொண்டு, உன்  
      தலைவியினிடம்போய் என்னைப் பாராவிட்டால் இன்று  
      இப்படியே இந்த விடத்தை விட்டுப் பெயராது உயிரை  
      விடச் சித்தமாயிருக்கிறேனென்று சொல்லி வா, என்றார். 
       
        | 
  
   
    |  ப. 
       | 
     இதென்ன 
      சங்கடமா யிருக்கிறது? நீலவேணி இத்  
      திரையைத் தள்ளிவிடு. இதற்கப்புற மிருந்து என் 
      னுடன் பேசுவதானால் வரச்சொல், போ. 
                            [ நீலவேணி 
      போகிறாள். ]  
       
      என்ன ஆச்சரியம் !  ஏது மஹாராஜா இப்படி கூறும்  
      படி நேரிட்டது? என்பொருட்டு அவ்வளவு மன உருக் 
      கம் வந்து விட்டதோ? என்ன என்னுடன் பேச வந் 
      திருக்கிறார்? ஏதோ அவருடைய மனம் திரும்பியிருக் 
      கிற தென்பதற்குச் சந்தேகமில்லை- ஆயினும் இனி  
      திரும்பி என்ன, திரும்பாமல் என்ன !  
       
        | 
  
   
    |  
                புருஷோத்தமராஜன் 
        திரைக்கு ஒரு புறமாக வந்து நிற்கிறார். 
         
          
     | 
  
 
    |  பு. 
       | 
     ஆம் ! ஆம் !  
      மஹா பாதகனாகிய நான் உன்னைக் கண் 
      ணெடுத்தும் பார்க்கத் தக்கவனல்லன் !  பத்மாவதி- 
      பெயரிட்டாவது உன்னை நான் அழைக்க லாகாதோ? 
       
        | 
  
   
    |  ப. 
       | 
     விஜயா, 
      எதற்காக வந்திருக்கிறார் என்று கேள்? 
       
        | 
  
   
    |  வி. 
       | 
     மாமா- 
       
        |