|  ப.
       | 
     
      ஸ் !  மஹாராஜா என்று அழை, அவர்தான் உனது  
மாமனார் அல்லவென்று சபையறியச் சொல்லிவிட்டாரே !  
         
        
     | 
  
   
    |  வி.	
       | 
     மஹாராஜா-தாங்கள் எதற்காக வந்தீர்களென்று கேட் 
கச் சொல்லுகிறார்கள்? 
       
        | 
  
   
    |  பு.
       | 
     வேண்டும் ! வேண்டும் !  எனக்கு இந்தத் தண்டனையும்  
வேண்டும் !  அதிகமும் வேண்டும் !  நான் செய்த தப்பிதத்  
திற்கெல்லாம் இதுவும் போதாது !  ஆயினும்-பத்மா 
வதி !  என்னை நேரிற் பாராவிட்டாலும் ஒரு வார்த்தை 
யுங் கூறலாகாதா? நான் அவ்வளவு இழிந்தவனாய்விட் 
டேனோ? 
       
        | 
  
   
    |  ப.
       | 
     
      இதெல்லாம் இப்பொழு தென்னத்திற்கு? வந்த சேதி 
யைச் சொல்லும்படி கேள்-விஜயா. 
         
        
     | 
  
   
    |  பு.
       | 
     பத்மாவதி நீ அக்னிப் பிரவேசமாகச் சித்தஞ் செய்து  
கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அதைத் தடுக்க வந்தேன். 
       
        | 
  
 
    |  ப.
       | 
     
      ஏது? மஹாராஜாவுக்கு-வேசையாகிய-என்மீது இந் 
தப் பதினாறு வருஷங்களாக இல்லாதபட்சம் இப்போது  
வந்தது?-கேள் விஜயா. 
         
        
     | 
  
   
    |  பு.
       | 
     ஐயோ !  
      பத்மாவதி !  இன்னொருமுறை இதைக் கூறு  
      வையாயின், அதை நேற்றைத்தினம் கூறியதற்காக என்  
      நாவை உன் முன்னிலையிலேயே அறுத்தெறிவேன் !   
      ஐயோ !  நானிதற்காக இதுவரையிற் பட்டதுயரமெல் 
      லாம் போதாதோ? நீயும் என்னை வருத்தவேண்டுமோ?  
      பத்மாவதி !  பத்மாவதி !  இந்தப் பதினாறு வருஷங்களும்  
      உனக்குத் துரோகியாக இருந்த நான் செய்ததெல்லாம்  
      தவறு ! தவறு !  ஒப்புக்கொண்டேன் !  உத்தம பத்தினி 
      யாகிய உன்னைத் தூஷித்த தெல்லாம் தப்பிதம் !  தப்பி 
      தம் !  இப் பாதகன் உனது மகிமையை யறியாது செய்த  
      தெல்லாம் தவறென ஏற்றுகொள்ளுகிறான் !  நான் உனது  
      கரத்தைப் பற்றிய கணவனாயிற்றே என்றாயினும் சற்றி 
             14 
       
        |