மூன்றாவது அட்டவணை திரிகோணப்பாலை இராகங்கள். அட்டவணையில் இரட்டையான இரண்டு நாலு ஆறு போன்ற அலகுகளில்வரும் சுரங்கள் ஆயப்பாலையின் சுரங்களே. ஆனால் அவைகளோா அரை அலகு கூடியும் அரை அலகு குறைந்தும் இராகங்களில் வருகிறதாகக் காண்போம். திஷ்டாந்தமாக நாலு அலகில் (1/4) அலகு கூடி நாலரை என்றும் (1/8) அலகு குறைந்து மூன்றரை அலகு என்றும் வரும். சங்கராபரண இராகத்தில் ரிஷப தைவதங்கள் நாலரை அலகாக வருகின்றன. மற்ற சுரங்கள் சுத்தமாக நிற்கின்றன. தோடியில் காந்தார நிஷாதங்கள் மூன்றரை மூன்றரையாக வருகின்றன. தன்னியாசியில் காந்தார நிஷாதங்கள் நாலரை நாலரையாக வருகின்றன. தஞ்சை வித்தியா மஹாஜன சங்கத்தில் முதல் முதல் விசாரித்து தீர்மானிக்கக் கூடாமல் விட்டு விட்ட நாட்டையில் ரிஷப நிஷாதங்கள் ஆறரை ஆறரையாக வருகின்றன. அம்சத்தொனியில் காந்தார நிஷாதங்கள் ஆறரை ஆறரையாக வருகின்றன. இது போல் மத்திமமும் நாலரை ஆகவும் ரி, க, த, நி என்கிற நாலு சுரங்களும் ஆறரை அலகுகளாகவும் அட்டவணையில் காண்போம். மற்ற சுரங்கள் யாவும் ஆயப்பாலையின் சுரங்களே. இதையே திரிகோணப்பாலை என்று பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவருகிறார்களென்று தெரிகிறது. இவைகள் பூர்வ இசைத் தமிழ் முறையில் வழங்கிவரும் பண்களாலும் கீர்த்தனங்களாலும் நாளது வரையும் வழக்கத்திலிருக்கும் இராகங்கள், இராகங்களின் ஆரோகண அவரோகணங்களைப் பின் வரும் அட்டவணைகளில் காண்க. | நம்பர் | இராகங்கள். | ஆரோகணம் | அவரோகணம் | | 1 | சங்கராபரணம் | ச ரி க ம ப த நி ச | ச நி த ப ம க ரி ச | | 2 | தோடி | ச ரி க ம த நி ச | ச நி த ம க ரி ச | | 3 | தன்னியாசி | ச க ம ப நி ச | ச நி த ப ம க ரி ச | | 4 | தேனுகா | ச ரி க ம ப த நி ச | ச நி த ப ம க ரி ச | | 5 | நாட்டை | ச ரி க ம ப த நி ச | ச நி ப ம ரி ச | | 6 | பௌளி | ச ரி க ப த ச | ச நி த ப க ரி ச | | 7 | பலஹம்சா | ச ரி ம ப த ச | ச நி த ப ம ரி ம க ச | | 8 | ஆபோகி | ச ரி க ம த ச | ச த ம க ரி ச | | 9 | ஷண்முகப்பிரியா | ச ரி க ம ப த நி ச | ச நி த ப ம க ரி ச | | 10 | காமவர்த்தனி | ச ரி க ம ப த நி ச | ச நி த ப ம க ரி ச | | 11 | நாட்டைக்குறிச்சி | ச ரி க ம நி த நி ப த நி ச | ச நி த ம க ச | | 12 | ஸ்ரீ ரஞ்சனி | ச ரி க ம த நி ச | ச நி த ம க ரி ச | | 13 | அம்சத்தொனி | ச ரி க ப நி ச | ச நி ப க ரி ச | | 14 | மோகனம் | ச ரி க ப த ச | ச த ப க ரி ச |
|