பக்கம் எண் :

920
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

மோனியத்தைப்பழகும் பலரும், English music science படிக்கும் பலரும் அறிந்திருப்பதினால் இதை யாவரும் சுலபமாய் அப்பியாசிக்க இம்முறையில் இந்திய இராகங்களைக் குறிப்பது மிகச் சுலபமானதென்று எண்ணுகிறேன்.

இப்படிச் செய்வதில் அரை அரைச்சுரங்களிலான ஆயப்பாலை இராகங்களே ஆர்மோனியம் பியானாவில் வாசிக்கப்படக்கூடியவை. ஆனால் மற்றும் இரண்டு காரியங்கள் முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டும். இந்தியாவில் வழங்கும் தாளத்திற்கேற்ற விதமாய் அங்கங்கள் பிரித்து வழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

இரண்டாவது பன்னிரு அரைச்சுரங்களுக்கு மேற்பட்டு சுருதிகளும் நுட்பமான சுருதிகளும் வருவதை பன்னிரெண்டு சுரங்களுக்கு மேல் குறித்துவைக்க வேண்டும். அவைகள் ஆர்மோனியம் பியானாவில் வாசிக்க முடியாமல் போனாலும் வாய்ப்பாட்டு, யாழ், குழல் வாசிப்பவர்களுக்கு உதவியாயிருக்கும்.

ஒரு தாயியில் ரி-த க-நி ம-நி etc போன்ற பொருத்தமுடைய சுரங்கள் கூடுதலாக வருவதைக் காண்போம். இரண்டு அலகுள்ள ரிஷபத்தின் மேல் 21/4, 21/2,23/4, 3, 31/4,31/2, 33/4 போன்ற சுருதிகள் வருவதினால் 1/4, 1/2, 3/4, 1, 11/4, 11/2, 13/4-க்குப் பதில் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற இலக்கங்களைக் குறித்துக் கொண்டால் அந்த சுரங்கள் நுட்பமான சுருதிகளைச் சேர்த்துக்கொண்டு வருகிறதென்று அறிவதற்குப் போதுமானதென்று எண்ணுகிறேன்.

திஷ்டாந்தமாக நாலு அலகுள்ள ரிஷப தைவதத்தின்மேல் இரண்டு போட்டால் அதை நாலரை அலகாகத் தெரிந்து கொள்வோம். இது சங்கராபரண இராகத்தில் வருகிறது. அப்படியே நாலு அலகுள்ள ரிஷப தைவதங்களில் ஒன்று மேல் போடுவோமானால் ஆரபி, பூரணச்சந்திரிகை, செஞ்சுருட்டி முதலிய இராகங்களில் வரும் சுரமாம். இதுபோல் நுட்பமான சுருதிகள் வழங்கிவரும் வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை இராகங்களை அட்டவணைகளிள் விபரமாய்க் காணலாம்.

இதனால் இங்கிலீஷ் மியூசிக் நொட்டேஷன்களும் அதைச் சேர்ந்த சில திருத்தங்களும் நம் இந்திய சங்கீதத்தில் 1/2,1/2 சுரங்களாலான ஆயப்பாலை இராகங்களுக்குப் போதுமானதென்று எண்ணுகிறேன்.

(2) அதில் வழங்கும் சுரங்களின்மேல் நுட்பமான சுருதிகளை அறிவதற்கு இலக்கம் குறித்துக்கொள்வது ஆர்மோனியம் பியானா நீங்களாக மற்றும் இந்திய வாத்தியங்கள் கற்றோருக்கும் வாய்ப்பாட்டுப் படிப்போர்க்கும் உதவியாயிருக்கும்.

(3) வெவ்வேறு அளவுள்ள ஏகதாளத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட இங்கிலீஷ் நொட்டேஷனில் வரும் அங்கங்கள் (bar) பிரிப்பது போல இந்திய தாளத்திற்கேற்ற விதமாய் அங்கம் பிரிக்கப்பட வேண்டுமென்பதை அடியில் வரும் சில உதாரணங்களால் காண்க.