tuning forksஎன்பவைகளில் உதவியைக்கொண்டு தான் அப்படிச் செய்யலாம். அப்பேர்ப்பட்ட சுருதி சேர்ந்த ஒரு வாத்தியத்தை உண்டுபண்ணின பிறகு அதில்வாசிக்கப்படும் சங்கீதத்தையும் Equal temperament முறையாய் உண்டாக்கப்பட்ட வாத்தியத்தின் சங்கீதத்தையும் ஒத்துப்பார்க்கவேண்டும். இரண்டு சங்கீதத்தின் இனிமையைக்கண்டு பிடிப்பதற்குத்தேர்ந்த வித்வான்கள் அவசியம் என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. மேற்காட்டிய அட்டவணையையும் இவர் சொல்லி யிருக்கும் சில வசனங்களையுங் கவனிக்கையில் ஒரு ஸ்தாயியில் 12 சுரங்கள் வரவேண்டுமென்றும் அவைகள் சம அளவுடையவைகளாயிருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது. ஒவ்வொரு சுரத்திற்கும் இடையில் வெவ்வேறு அளவான இடைவெளிகளுடன் நம் பூர்வ சங்கீத மிருக்கிறதில்லை யென்று தெளிவாகச் சொல்லுகிறார். ஆனால் இவர் கொடுத்த அளவைக் கவனிக்கும்போது 15/16,24/25,25/27,128/135 என்ற நாலு விதமான இடைவெளிகள் வருகிறதாகக் காண்கிறோம். அதோடு கூட இப்பன்னிரண்டு சுரங்களின் வரிசை Mr. தேவால், Mr. கிளமெண்ட்ஸ், Mr. நாகோஜிராவ் சொல்லிய கணக்கின் படி வருகிறதேயன்றி வித்தியாசம் வேறொன்றுமில்லை. இப்பன்னிரண்டு சுரங்களும் இந்துஸ்தானி சங்கீதத்திற்கே யுரியவையென்று தெளிவாகச் சொல்லுகிறார். மற்றும் இவருடைய வியாசங்களில் இவரது அபிப்பிராயம் இன்னும் முற்றுப் பொறாமையால் இன்னதென்று எடுத்துச் சொல்லக் கூடவில்லை. பலர் பலவாறாகச் சொல்லுகிற பத்துச் சுருதிகளையும் விட்டுவிட்டுப் பன்னிரண்டை மாத்திரம் எடுத்துக்கொண்டதைக் கவனிக்கையில், முன்னவர்கள் சொன்ன பத்துச் சுருதிகளும் சரியானவையல்ல வென்பது இவர் கொள்கை யென்று திட்டமாய்த் தெரிகிறது. மேலும் இவர் கர்நாடக சங்கீதமுறை மேலானதென்றும் வீணையின் சுர நிச்சயம் சிறந்ததென்றும் சொல்லுகிறார். அதோடு சங்கீத பாரிஜாதக்காரருடைய சுருதி முறை இப்படி யிருக்கவேண்டுமென்று அடியில்வரும் கணக்குக்கொடுக்கிறார். The Indian Music Journal, 1912 May and June Issue, Vol. II No. 2. 36 - 37-வது பக்கங்களில் “பாரிஜாதக்காரர் சுருதி முறை இப்படியிருக்கலாமென்று சொன்ன கணபதி ராவ் கோபால் ராவ் பார்வ் அவர்கள் அர்த்தஞ் செய்து சொல்லியிருப்பது ஒருவாறு சரியாயிருந்தாலும் ரிஷபத்தின் ஸ்தானதங்களில் பாரிஜாதக்காரரின் அபிப்பிராயம்போலில்லையென்று சில குறிப்புகள் சொல்லி அதன்பின் பாரிஜாதக்காரருடைய அபிப்பிராயம் இப்படியிருக்கவேண்டுமென்று பின்வரும் கணக்கு சொல்லுகிறார். Making these corrections this scale stands thus :- OPEN STRING = 1 | | | Sa = 1 | | Pa = 2/3 | Ko - | Ri = 25/27 | Ko - | Dha = 11/18 | Su - | Ri = 8/9 | Su - | Dha = 7/12 | Su - | Ga = 5/6 | Su - | Ni = 5/9 | Ti - | Ga = 19/21 | Ti - | Ni = 19/36 | Su - | Ma = 3/4 | Tara - | Sa = 1/2 | Ti - | Ma = 25/36 | | |
அதாவது பார்வ் அவர்களின் அபிப்பிராயத்தைக் கண்டித்துப் பாரிஜாதக்காரரின் சரியான முறைப்படி பின்வரும் சுரங்கள் வரவேண்டும். | | சு = 1 | | ப = 2/32 | கோ - | ரி = 25/27 | கோ - | 11/18 | சு - | ரி = 8/9 | சு - | த = 7/12 | சு - | க = 5/6 | சு - | நி = 5/9 | தீவிர - | க = 19/27 | தீவிர - | நி = 19/36 | சு - | ம = 3/4 | தார - | ச = 1/2 | தீவிர - | ம = 25/36 | | |
|