பக்கம் எண் :

581
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

சாரங்க தேவரோஷட்ஜ கிராமம்4 3 2 4 4 3 2
 மத்திம கிராமம்4 3 2 4 3 4 2
 காந்தார கிராமம்3 2 4 3 3 3 4

என்ற அலகோடு வரவேண்டுமென்று சொல்லுகிறார். இவற்றில் முதலாவதாகிய ஷட்ஜ கிராமம் ‘குரல் குரலாக எடுத்து இளி குரலாக வாசித்தாள்’ என்ற வாக்கியத்தின்படி வட்டப்பாலையில் பஞ்சமத்திலிருந்து 4, 3, 2, 4, 4, 3, 2 என்ற நெய்தல் யாழ் அலகு முறைக்கு ஒத்திருக்கிறது. இது போலவே மத்திம கிராமம் 2, 4, 3, 2, 4, 4, 3 என்ற அலகுகளையுடைய குறிஞ்சி யாழாகவும் காந்தார கிராமம் 4, 4, 3, 2, 4, 3, 2 என்ற அலகுகளையுடைய பாலை யாழாகவும் வரலாம். ஆனால் மத்திம கிராமத்தில் பஞ்சமம் மூன்று அலகுடையதாகவும் தைவதம் 4 அலகுடையதாகவும் வருகிறது. 4, 3, 2 என்ற முறைக்கு இது விரோதமாகிறது. அதோடு மேற்காட்டிய 16 பண்களிலிருந்து உண்டாகக் கூடிய 112 வரிசைகளிலும் இது வரமாட்டாது. அது போலவே 3, 2, 4, 3, 3, 3, 4 என்ற காந்தார கிராமமும் தவறுதலாக வருகிறதென்றும் முந்தின முறைக்கு ஒத்து வரமாட்டாதென்றும் தெரிகிறது. மேலும் சாரங்கர் சொல்லும் காந்தாரக் கிராமம் ச-ப 13 சுருதியாகவும் ச-ம 9 சுருதியாகவும் வரவேண்டுமென்ற பொது விதிக்கு மாறுதலாக வருகிறதென்று தெளிவாகத் தெரிகிறது. முதல் நாலு சுரங்களின் அலகுகள் 3 + 2 + 4 + 3 = 12 என்றும் 3 + 3 + 4 = 10 என்றும் வருகிறது.

மேற்காட்டிய 16 ஜாதிகளின் அலகுகளிலிருந்து சாரங்கர் குறித்திருக்கும் மத்திம காந்தார கிராமங்களின் அலகுமுறை வரமாட்டாவென்பதை பின்வரும் அட்டவணையில் பார்ப்போம். அவர் காலத்திலேயே மத்திம கிராமத்தைப் பற்றியும் காந்தாரக் கிராமத்தைப் பற்றியும் சந்தேகமிருந்ததாகத் தெரிகிறது. காந்தார கிராமம் தேவலோகத்திற்குப் போய்விட்டதென்று சொல்லுகிறார். அதைக் கொண்டு பூர்வ தமிழ் நூல்களில் வழங்கி வந்த மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை யென்னும் நால்வகை யாழின் அலகு முறையில் சந்தேகங்கொண்டு சொல்லுகிறார் என்று நாம் நினைக்க இடமிருக்கிறது.

பன்னிரு பாலையில் முக்கியமானவை ஏழு பெரும்பாலையென்றும் அவை ஒவ்வொன்றுள்ளும் எவ்வேழு பாலை பிறக்குமென்றும் இதன் முன் சொல்லியிருக்கிறார். அதில் பெரும் பண்கள் 4 என்பதையும் ஒவ்வொரு பண்ணிலும் நவ்வாலு ஜாதி பிறக்குமென்பதையும் பிரதானமாகக் கொண்டு "நாற்பெரும் பண்ணும் சாதி நான்கும்" என்று சொல்லுவதோடு "பாற்படு திறனும் பண்ணெனப்படுமே" என்பதினால் ஒவ்வொரு பண்ணிலிருந்தும் எவ்வேழு பண்கள் வீதம் 16 பண்களிலிருந்தும் 112 பண்கள் பிறக்கலாமென்றும் தெளிவாகத் தெரிகிறது. அம்முறையே கிடைக்கும் பண்களையும் அவைகளுக்குக் கிடைக்கும் அலகு முறைகளையும் பின் காட்டிய அட்டவணையில் கண்டு கொள்க.