பக்கம் எண் :

668
மறைப்பு நீங்கிய சக்கரம்

அப்படியே தொட்ட இராசியிலிருந்து ஏழாவது இராசியிலுள்ள சுரம் ச-ப பைப்போல் பொருத்த முடையதாயிருக்கும். இவ்விரண்டும் நடுவில் ஆறு இராசிகள் நிற்கும். இம் முறையே எல்லாச் சுரங்களும் அமைந்திருக்க வேண்டும்.

இன்னும் மீனராசிக்கும் மேடராசிக்கும் நடுவிலுள்ள கோடு கன்னி, துலாம் என்ற இரு ராசிகளின் மத்தியாகி இராசிவட்டத்தை இரு சமபாகமாகப் பிரிக்கிறது. இக்கோட்டின் ஒரு பக்கம் ஆறு இராசியும் மற்றொருபக்கம் ஆறு இராசியும் வருகிறதை நாம் காண்கிறோம். இக்கோட்டின் அல்லது மீனரேகையில் வலது பக்கமாக ஆறு இராசி காலியா யிருக்கிறது.

அப்படியானால் மீனரேகையின் இடதுபக்கத்தின் அடிப்பாகத்தில் துலாத்தில் குரல் ஆரம்பிக்கிறது. மேல் பாகத்தில் மீனத்தில் உழை நிற்கிறதென்று நாம் பார்க்கலாம். குரலி