மேற்படி 721 வது பக்கம் 2வது அட்டவணையில் எல்லாத் தாய் இராகங்களுக்கும் தாய் இராகமாக வழங்கும் செம்பாலைப் பண்ணையே சங்கராபரணமென்று தற்காலத்தில் வழங்குகிறோம். செம்பாலைப் பண்ணில் வழங்கிவரும் ஏழு சுரங்களில், ஒவ்வொன்றையும் கிரகமாற்றிக் கொண்டுபோக ஆறு தாய் இராகங்கள் நமக்குக் கிடைக்கின்றன. நாலு அலகுள்ள துத்தத்தில் குரல் ஆரம்பிக்கும்பொழுது அது படுமலைப்பாலைப் பண்ணாம். இதையே கரகரகப்பிரியா என்று தற்காலத்தில் வழங்குகிறோம். நாலு அலகுள்ள கைக்கிளையில் குரல் ஆரம்பிக்கும்பொழுது அது செவ்வழிப்பாலைப் பண் என்று பூர்வத்தோர் வழங்கிவந்திருக்கிறார்கள். அதையே தற்காலத்தில் அனுமத்தோடி என்று வழங்குகிறோம். இரண்டு அலகுள்ள உழையில் குரல் ஆரம்பிக்கும்பொழுது வரும் இராகத்தை அரும்பாலைப் பண் என்று தமிழ் மக்கள் வழங்கிவந்தார்கள். அதையே தற்காலத்தில் மேசகல்யாணி என்று சொல்லுகிறோம். இளியில் குரல் ஆரம்பித்து வரும் இராகத்தை கோடிப்பாலைப்பண் என்று பூர்வத்தோர் வழங்கிவந்திருக்கிறார்கள். தற்காலத்தில் அதை அரிகாம்போதி என்று சொல்லுகிறோம். நாலு அலகுள்ள விளரியைக் குரலாக ஆரம்பித்துப் பாடும்பொழுது வரும் இராகத்தை விளரிப்பாலைப்பண் அல்லது விளரிப்பாலை என்று இசைத்தமிழ் நூல் சொல்லுகிறது. அதையே தற்காலத்தில் நடபைரவி என்கிறோம். நாலு அலகுள்ள தாரத்தைக் குரலாக ஆரம்பிக்கும்பொழுது அதை மேற் செம்பாலைப்பண் என்று பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்திருக்கிறார்கள். அதையே தற்காலத்தில் சுத்த தோடி என்று சொல்லுகிறோம். இவ்வேழு இராகங்களில் ஏழாவதான சுத்த தோடி பஞ்சமம் இல்லாமல் வருகிறதைக் காண்போம். அதோடு காந்தாரத்தை ஆரம்ப சுரமாக வைத்துக்கொள்ளும்பொழுது அனுமத்தோடி என்கிற சம்பூரண இராகம் பிறப்பதனால் இதைத்தள்ளி ஆறு இராகங்களையும் தாய் இராகங்களாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதனாலேயே செம்பாலைப் பண் என்ற முதல் இராகத்திற்கு ஏழாவதாக வரும் பண்ணை மேற்செம்பாலைப்பண் என்று சொல்லியிருக்கிறார்கள் என்ற நினைக்க இடமிருக்கிறது. சங்கராபரணம், கரகரப்பிரியா, அனுமத்தோடி மேசகல்யாணி, அரிகாம்போதி, நடபைரவி என்னும் ஆறு தாய் இராகங்களையும் அவைகளிலிருந்துண்டாகும் 300 க்கு மேற்பட்ட ஜன்னிய இராகங்களையும் தமிழ் மக்கள் தற்காலத்திலும் நன்றாய் அறிவார்களே. 31. பூர்வ தமிழ் மக்கள் கைக்கிளை தாரத்திற்கு ஆறு அலகுகள் அல்லது சுருதிகள் வழங்கி வந்தார்களென்பது. இது நிற்க 720-ம் பக்கத்தில் பன்னிரு பாலையுண்டாகும் விதத்தைக்காட்டிய சக்கரத்தில் நாம் முன் பார்த்த ஏழுபெரும் பாலை போக ஐந்து சிறு பாலை காணப்படுகிறது. இவைகளைப் பற்றிக் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. ஆறு தாய் இராகங்களுக்கும் வரும் சுரங்களை அட்டவணையில் காண்கிறோம். அவைகள் ஆயப்பாலையில் வழங்கும் அரை அரையான பன்னிரண்டு சுரங்களாக இருக்கின்றன. அவைகள் தத்தம் அலகின் கிரமப்படி ஒன்றோ டொன்ற கலவாமல்
|