எப்படித் தெரியும்? அவர்களுக்கு இந்த ஊராரைப் பற்றி என்ன தெரிய முடியும்? என்று இகழ்வார்கள். "ஆளைப் பற்றிக் கவலை இல்லை்; கட்சியே பெரியது", என்று எவ்வளவு பெரிய இடத்திலிருந்து அறிவுரை வந்தாலும் "சரி, சரி, இந்த ஆளை நிறுத்தி வைக்கலாமா? இவரை மன்றத்துக்குத் தேர்ந்தெடுத்தால், கட்சியின் பெயரே கெட்டுப் போகுமே! கட்சியின் பெயரால் இவருக்கு வாக்குரிமை கொடுப்பதை விட அதோ அந்தப் புளியமரத்துக்குக் கொடுத்தாலும் பயன் இருக்குமே", என்று காட்டுப்பாக்கத்துத் தோசைக்கார ஆயாவும் ஓட்டுப்போட மறுத்துவிடுவாள். படித்தவர்கள் அறத்தை மறந்தாலும் படிக்காதவர்களின் மனச் சான்று மறக்காது? "இந்த ஆள் பொல்லாதவன், தன்னலம் உடையவன், பகட்டும் பெருமையும் இருந்தால் யாருக்கு என்ன? இவனுக்கு ஓட்டுப் போடுவது பாவம்", என்று உணர்ந்து அவர்களுடைய மனச்சான்று மறுத்துவிடும். மனச்சான்று ஆகவே, அற நாட்டம் இல்லாதவர்களுக்கு - வெறும் பணவேட்டை உடையவர்களுக்கு - ஊர் மன்றத்திலேயே இடம் இல்லாதபடி அந்த ஊரார் செய்து விடுவார்கள். ஊர் மன்றத்திலே இடம் இல்லாதபோது தாலுக்கா மன்றம், ஜில்லா மன்றம், பாராளுமன்றம் இவற்றை எட்டிப் பார்க்க முடியுமா? ஆகவே ஒருவாறு கெட்டவர்களை வடிகட்டித் தடுக்க முடிகின்றது அல்லவா? இதுதான் தேர்தலில் தனியுரிமையை வாழவைப்பதன் பயன். மக்கள் மனச்சான்றோடு பிறந்தவர்கள். செல்வமும் செல்வாக்கும் பகட்டும் புகழும் |