| கடமை இன்னது என்று உணர்ந்தார்கள் என்றும், அதனால் கடமையைச் செய்தார்கள் என்றும் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். இல்லையானால், தமக்கு உரிமை இல்லாததைத் தமது என்று உணர்ந்து பெருமை கொண்டு அறம் செய்வதாக முடியும்; அப்படிப்பட்டவர்களைப் புகழ்வதால் உலகத்தில் 'எனது' என்னும் செருக்கை வளர்க்கும் குற்றம் அறிஞர்களைச் சாரும். தனி மனிதன் மான உணர்ச்சியால் செய்யும் செயல்களையும் அவ்வாறே போற்றிப்புகழக்கூடாது. தனி ஒருவரின் மானம் என்பது அவருடைய புலனடக்கத்தைப் பற்றியாவது, ஒழுக்கத்தைப் பற்றியாவது, சொல் தவறாது
நடத்தல் முதலிய காரணம் பற்றியாவது இருக்கலாம். அது பொதுமக்களால்
புகழத்தக்கபடி அவ்வளவு வெளிப்படையானதாக இருக்க வேண்டியதில்லை.
தன் குடும்பம் என்ற மானம் குடும்பத்தளவில் இருக்க வேண்டும். தன் ஊர்
என்ற மான உணர்ச்சியும் ஊர்க்கடமையில் இருக்க வேண்டும். தன் நாடு
என்ற மான உணர்ச்சியும் நாட்டுக் கடமையில் இருக்க வேண்டும்; தனி மான
உணர்ச்சியை ஊர்க் கடமையில் காட்டுவதோ, குடும்ப மான உணர்ச்சியை
நாட்டுத் தொண்டில் புகுத்துவதோ மானமும் அல்ல; வீரமும் அல்ல;
ஊர்க்கும் நாட்டுக்கும் தீமையான செயல்களே ஆகும். இப்படி ஏதாவது
செயல் செய்தாலும் அறிஞர்கள் எந்தக் காரணத்தாலும் அவர்களைப்
புகழாமல் இருப்பதே நல்லது. புகழ்ந்தால் உலக வளர்ச்சிக்குத் தடையான சில
உணர்ச்சிகளை வீரம் மானம் முதலான நல்ல பெயர்களால் வளர்க்கும் குற்றம்
சாரும். சில நாட்டுப் போர்கள் சில அரச குடும்பங்களின் மான உணர்ச்சியால்
தோன்றி வளர்ந்து பல |