மூன்றாவது: மிகை நாடிய பிறகு, கொள்ளல் தள்ளல் வேண்டும் அன்றோ? குணம் மிகுந்ததைக் கொள்ள வேண்டும்; குற்றம் மிகுந்ததைத் தள்ள வேண்டும். அப்போதும், கண்மூடி ஏற்றுக்கொள்ளாமல், முழுதும் இத்தகையது என்று போற்றாமல்,மிகுந்திருக்கும் பண்பு பற்றியே ஏற்றுக் கொள்ள வேண்டும். சிறு குறை பற்றி ஒன்றை விடுத்தல் கூடாது; ஒரு குறையும் இல்லாதது என்று ஒன்றைக் கண்மூடி ஏற்றலும் கூடாது. இதுவே மிக்க கொளல் என்று திருவள்ளுவர் கூறிய ஆராய்ச்சி முடிவாகும். | | குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். | (திரு. 504) | | |
|
|