பக்கம் எண் :

வடிவம் 205

Untitled Document

உணர்ச்சி கலக்காத அறிவுப் பகுதியை மட்டும் உணர்த்துவதானால்,
தத்துவ நூல்கள் இலக்கண  நூல்கள் முதலியவற்றில் உணர்த்துதல்
போல், சொற்களின்   வரையறுத்த   பொருள் அறிந்து தெளிவாக
நேரிய   முறையில்   உணர்த்தி   விடலாம்.  சில அறிவுத்துறைக்
கட்டுரைகளிலும்   அது   முடியும்.  ஆனால்   உணர்ச்சி கலந்த
கட்டுரையிலோ, கடிதத்திலோ அது   முடியாது. உணர்ச்சி என்பது,
சொற்களின்   நேரான   பொருளில்    இல்லை என்பதை முன்பு
கண்டோம்.   சொற்களின்  அமைப்பு  முறையிலும் ஒலிநயத்திலும்
தொடர்பிலும்     பிறவற்றிலும்       உணர்ச்சியைப் புலப்படுத்த
வேண்டியுள்ளது.   'அவன் விழுந்தான்'   என்பதை   'விழுந்தான்
அவன்' என்று மாற்றி அமைத்தால் உணர்ச்சி புலப்படுகிறது அதே
வாக்கியத்தைச்   சில   வேறு வகையாக ஒலித்துச் சில வேறுபட்ட
உணர்ச்சிகளைப்   புலப்படுத்த   முடியும்.  அன்றியும், ஒவ்வொரு
சொல்லும்   எத்தனையோ   உணர்ச்சிகளோடு   தொடர்புபடுத்தி
வழங்கப்பட்டிருத்தலால்,  அந்த உணர்ச்சிகளின் உறவும் அவற்றில்
கலந்துள்ளது.   உணர்ச்சியோடு ஒருவர் அவற்றை வழங்கும்போது,
அவர் வழங்கும்   முறையால் உள்ளத்தில் உணர்ச்சி புலப்படுகிறது.
ஆகவே,   சொற்களுக்கு   இயல்பாக   உரிய   பொருள் மட்டும்
அல்லாமல், அவற்றால் உணர்ச்சி வேறுபாடுகளும் புலப்படுகின்றன.
உணர்ச்சி நுட்பங்களை  இவ்வாறு புலப்படுத்தும் திறன் ஒவ்வொரு
வர்க்கும்   ஒவ்வொரு   வகையாக   அமைந்துள்ளது.  ஆதலின்
உணர்ச்சி   புலப்படும்   கட்டுரை,  கதை,   காவியம்,   நாடகம்
முதலியவற்றில்   மட்டுமே  நடைவேறுபாடு   தெளிவாகப்  புலப்
படுகிறது எனலாம்.

கடுமை

     உடுத்தும்   உடை வகையில் மக்கள் இருவகையார் என்றும்,
அதுபோலவே  எழுதும் நடை வகையில் புலவர் இருவகைப்படுவர்
என்றும் ஷார்ப்   என்ற அறிஞர் குறித்துள்ளார். சிலர் பிறருடைய
பார்வையைப்   பற்றிக்   கவலைப்படாமல்,  தமக்கு உரிய எளிய
உடையிலேயே   விளங்குவர்;   தேவை   ஏற்பட்டபோது மட்டும்
சிறப்பான   உடை   உடுத்துச்   செல்வர்.   மற்றும்  சிலர், பிறர்
மதிப்பதைப்    பற்றிக்    கண்ணும்  கருத்துமாக இருந்து, தெருத்
திண்ணைக்குச்     செல்வதாயினும்     கடைத்     தெருவுக்குச்
செல்வதாயினும்   மதிப்புடைய  உடை உடுத்துச் செல்வர். புலவர்
சிலர்,   தமக்கு   இயல்பான  எளிய நடையிலேயே பெரும்பாலும்