பக்கம் எண் :

256இலக்கியத் திறன்

Untitled Document

புலவர் ஈடுபடுகின்றனர். ஆனால் இலக்கியத்தை இப்படி ஆய்தல்
வேண்டும் என்று அறிவுறுத்தும் விதிகள் மிகத்தெளிவாக உள்ளன:
அவற்றைக் கற்றுத்   தேர்ந்து பயிற்சி பெற்று ஆராய்ச்சியாளராக
விளங்க முடியும்1.

இருவகைத் திறனும் அமைதல்

     இலக்கியத்தைப் படைக்கும்  திறனும், இலக்கியத்தை ஆயுந்
திறனும்   வேறு   வேறானவை     எனக் கண்டோம்,   அவை
வேறுபட்டனவே அன்றி: முரண்பட்டன  அல்ல. சிலர்  அவற்றை
முரண்பட்டன    எனக்கொண்டு,  இலக்கியத்தைப்    படைக்கும்
கலைஞர்   இலக்கியத்தை   ஆயும்  அறிஞராக, மாற முடியாது
என்றும்,  இருவகைத்   திறனும் ஒருவரிடம் அமைதல்  இயலாது
என்றும்,2   ஒரு நாட்டில்  இலக்கியம்  படைக்கப்பட்டு வளரும்
காலத்தில் இலக்கிய   ஆராய்ச்சி    வளராது என்றும், இலக்கிய
ஆராய்ச்சி தழைக்கும் காலத்தில் இலக்கியப் படைப்புக்  குறையும்
என்றும் கூறுவர். அவர்   கருத்துப்படி,  படைக்கும்  கலைஞரும்
ஆயும் அறிஞரும் வேறு வேறாகஇருத்தல் போலவே,  படைக்கும்
காலமும் ஆயுங்   காலமும் இருத்தல் வேண்டும்*.  அக் கருத்து
உண்மை என்று தோன்றவில்லை.


     1. Though criticism may  be intuitive, the eritic may
also be conscious of the process by which he criticizes;
and this process appeals to certain intellectual principles
which can be set out in an orderly system, studies and
deliberately put into practice.But there are no principles
which will tell you how to create literature.

-L. Abercombie, Principles of Literary Criticism, pp.8-10


     2. மாத்யூ   ஆர்னால்ட்என்னும்   ஆங்கிலப்   புலவர் ஆராய்ச்சியாளராக மாறியவுடன்,பாட்டியற்றும் புலமை அவரை
விட்டு அகன்றது என்று சான்றும் காட்டுவர்

     * This fact has suggested antithesis between the
critical and the creative, between   critical  ages and
creative   ages  ;and  it is   sometimes thought that
criticism flourishes   most   at times   when creative
vigour is in defect.

      - T.S. Eliot,The Use of Poetry and the Use of
Criticism, p 20