தோற்றமும் வளர்ச்சியும் இலக்கிய ஆராய்ச்சி என்று தோன்றியது?இலக்கியம் என்று தோன்றியதோ அன்றே இலக்கிய ஆராய்ச்சியும் பிறந்தது எனக் கூறல் வேண்டும். இலக்கியத்தை முதலில் கற்ற மனிதன, அப்படிச் சொல்லியதை விட இப்படிச் சொல்லியிருந்தால் நன்றாக இருக்குமே என்று, என்று எண்ணிணானோ அன்றே அவனுடைய மனத்தில் இலக்கிய ஆராய்ச்சி பிறந்து விட்டது. இரண்டு நூல்களைக் கற்கும் வாய்ப்புப் பெற்றவன், அதில் சொன்னதைவிட இதில் சொன்னது சிறப்பாக உள்ளது என்று, என்று அறியத் தொடங்கினானோ, அன்றே அவனுடைய அறிவு இலக்கிய ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது எனலாம். ஆயினும் இலக்கிய நூல்கள் பற்பல தோன்றி மக்கள் உள்ளத்தில் நிலைத்த இடம் பெற்ற பிறகும் இலக்கிய ஆராய்ச்சி என்பது தெளிவான ஒரு துறையாக வளர்ச்சி பெறவில்லை. படைப்புத் துறை, தோன்றிய வுடனேயே விரைந்து வளர்ச்சி பெறத் தொடங்கியது. ஆராய்ச் சித்துறை பிறந்து பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகுதான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. முன்னோர்வகுத்தன இலக்கிய ஆராய்ச்சிக்கு உரிய நெறியும் விதிகளும் காலப்போக்கில் படிப்படியே விளங்கித் தெளிவாகியுள்ளன. தொடக்கக் காலத்தில், சிறந்த சில நூல்களை ஒப்பிட்டு அவற்றின் மதிப்புக் காணும் முயற்சியாகவும், அவற்றை இயற்றும் முறைகளை வகுக்கும் முயற்சியாகவுமே, இலக்கிய ஆராய்ச்சி இருந்துவந்தது எனலாம்1.புலவர்கள் இப்படி இப்படி அகப்பொருளும் புறப் பொருளும் பற்றிப் பாடியுள்ளனர் என்றும், மெய்ப்பாடுகளையும் உவமைகளையும் என்றும், மெய்ப்பாடுகளையும் உவமைகளையும் இவ்விவ்வாறு அமைந்துள்ளனர் என்றும், இன்ன இன்ன செய்யுளால் பாடியுள்ளனர் என்றும் இன்ன இன்ன மரபுகளைப் போற்றியுள்ளனர் என்றும் எடுத்துரைப்பதே தொல்காப்பியனார் காலத்து இலக்கிய ஆராய்ச்சியாக இருந்து வந்துள்ளது. பிற்காலத்தில் காவியம் இப்படி அமையவேண்டும் என்றும், 1. The history of Criticism has been very largely the history of attempts to formulate rules for Criticism chiefly by comparing the merits of several similar works of literature, and the means used the produce them. -L. Abercrombie. Principles of Literary Criticism, p.14 |