இனமாம். உலகு அல்லது உலகம் என்னும் சொற்குத் தமிழ் வேர்ப் பொருளா வடமொழி வேர்ப்பொருளா, எது பொருந்தும் என்று பகுத்தறிவுடையார் கண்டு கொள்க. |
லோக்க என்பது லோக் என்று இந்தியிற் குறுகும். |
ஐயன்: |
ஐ என்பது தலைவனைக் குறிக்கும் பெயர். |
| "என் ஐ முன் நில்லன்மின்" | (771) |
என்பது குறள் |
தலைவன் எனினும் பெரியோன் எனினும் ஒக்கும். அரசன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன் என ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்க்கெல்லாம் ஐ என்பது பொதுப்பெயர். தாயைக் குறிக்கும்போது அது ஆய் என்று திரியும். ஐ என்பது 'அன்' ஈறு பெறின் ஐயன் என்றாகும். ஐயன் என்பதற்கு ஐயை என்பது பெண்பால், அண்ணனைக் குறிக்கும் போது ஐ, ஐயன் என்னும் சொற்கள் தன்னை, தமையன் எனத் தன், தம் என்னும் முன்னொட்டுப் பெறும். |
தமிழருட் பலவகுப்பார், அவருள்ளும் சிறப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தந்தையை ஐயன் அல்லது ஐயா (விளி வடிவம்) என்றே அழைக்கின்றனர், ஆசிரியர் எவ் வகுப்பாராயிருப்பினும், அவரை ஐயர் என்றழைப்பது வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தார் வழக்கு. |
பெரியோரை யெல்லாம் ஐயா என்று குறிப்பதும் விளிப்பதும் தொன்றுதொட்டுத் தமிழர் வழக்கம். மக்களுட் பெரியார் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ் நூன் மரபு. |
| "ஐயர் யாத்தனர் கரணம் என்ப." | (1091) |
என்பது தொல்காப்பியம் |
பிங்கல நிகண்டில் முனிவரைப்பற்றிய 3ஆம் பகுதி ஐயர் வகை எனப் பெயர் பெற்றுளது. |
முனிவரிலும் பெரியவர் தெய்வங்களாதலின், தெய்வங்கட்கும் கடவுட்கும் ஐயன் என்னும் பெயர் வழங்கும். |
ஐயன் = சாத்தன் (ஐயனார்), கடவுள். |
ஐயை = காளி, மலைமகள். |
இங்ஙன மெல்லாம் தொன்றுதொட்டு வழங்கும் ஐயன் என்னும் தென்சொல்லை, ஆர்ய என்னும் வடசொற்சிதை வென்பர் வடவர். |
வடவை: |
வடவை அல்லது வடந்தை என்பது வடம் (வடக்கு) என்னும் திசைப் பெயரினின்று திரிந்து, வடமுனையத்தில் (துருவத்தில்) அவ்வப்போது |