தோன்றும் நெருப்பை அல்லது ஒளியைக் குறிக்கும் தூய தென்சொல். தாயுமானவர் இதை வடவனல் என்றே குறிப்பிடுகின்றார். இதற்கு உத்தரம் (வடக்கு) அல்லது உத்தரமடங்கல் என்றும் பெயர். இதற்கு நேரான Aurora borealis என்னும் இலத்தீன் சொல்லும், வடக்கத்து நெருப்பு அல்லது ஒளி என்னும் பொருளதே. வடவை என்பதை வடவா எனத்திரித்து முகம் என்னும் சொல்லைச் சேர்த்து, பெட்டைக்குதிரை முகத்தில் தோன்றுவது என்று வடநூலார் பொருட்காரணங் கூறுவது, எத்துணை இழிதகவான செயல் என்று கண்டுகொள்க. | இஞ்சி: | இஞ்சுதல் = உள்ளிழுத்தல். நீர் இஞ்சியிருப்பது இஞ்சி. இஞ்சி, வேர்வகையாதலின் அதை இஞ்சிவேர் என்பது மரபு. கடைக்கழகக் காலத்தில் தமிழகத்தினின்று கிரேக்க நாட்டிற்கு ஏற்றுமதியான இஞ்சி வேர் கிரேக்கத்தில் ziggi beris என்றும், இலத்தீனில் zingiber, gingiber என்றும், அழைக்கப்பெற்றது. பின்னர் ஆங்கிலத்தில் ginger என்றாயிற்று. | வேத அல்லது இந்திய ஆரியர்க்கும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் யாதொரு தொடர்புமில்லை. ஆயினும், ziggi beris என்னும் கிரேக்க வடிவத்தை ச்ருங்கவேர எனத் திரித்து, விலங்கின் கொம்புபோன்றது எனத் துணிந்து கூறுவர் வடமொழிவாணர். ச்ருங்கம்=கொம்பு. வேர=உடம்பு. | சாயுங்காலம்: | பொழுது சாய்கின்ற காலம் சாயுங்காலம். இச் சொல் சாயங்காலம், சாய்ங்காலம் என மருவும். சாயங்காலம் என்பதின் வருமொழியை நீக்கிச் சாயம் (ஸாயம்) என வைத்துக்கொண்டு, முடிவது என்று பொருட் காரணங் கூறுவர் வடமொழியர். | ஆமைவடை: | ஆமையோடுபோல் மேலுங் கீழும் வளைவுள்ள வடை ஆமை வடை. ஆமைத்தாலி, ஆமைப்பலகை, ஆமைப்பூட்டு என்பனவும் இக் கரணியம் (காரணம்) பற்றியவையே. ஆமை என்பதை ஆம எனத்திரித்து, நன்றாய் வேகாதது எனக் கரணியங்காட்டின், பித்தரும் பேதையரும்தான் ஒப்புக்கொள்ள முடியும். | உவணம்: | உ என்பதே உயரத்தைக் குறிக்கும் ஓர் ஓரெழுத்து வேர்ச்சொல். உக, உச்சி, உத்தரம், உம்பர், உயர், ஊர்தி, உன்னு முதலிய சொற்களை நோக்குக. | | "உகப்பே உயர்தல்" | (789) | என்பது தொல்காப்பியம். | பிங்கல நிகண்டில் முனிவரைப்பற்றிய 3ஆம் பகுதி ஐயர் வகை எனப் பெயர் பெற்றுளது. | | உவண் = மேலிடம், உவணம் = உயர்ச்சி. உவணை = தேவருலகம். உவணம் = பருந்து, கலுழன் (கருடன்) | | |
|
|