| உயரப் பறக்கும் பறவை உவணம் எனப்பட்டது. "உயர வுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?" என்பது பழமொழி. உவணம் - சுவணம் = கலுழன் ஒ-நோ: உழல் - சுழல், உருள் - சுருள் |
சுவணத்தைச் சுபர்ண என்று திரித்து, சு+பர்ண என்று பிரித்து, நல்ல இலைபோன்ற சிறகுடையது என்று கரணியங் காட்டுவது, உத்திக்குப் பொருந்துமா என்று ஊன்றிநோக்குக. |
முத்து: |
முத்து-முத்தம். முத்து சிறியது; முத்தம் பெரியது. 'அம்' ஒரு பெருமைப் பொருள் ஈறு (augmentative suffix) ஓ.நோ: நிலை-நிலையம், விளக்கு-விளக்கம், மதி-மதியம்(முழுநிலா). முட்டுப்போல் உருண் டிருப்பது முத்து. முட்டு = முட்டை. முத்து-முட்டு. |
| உருண்டையாயுள்ள விதைகளும் முத்தெனப்படும். எ-கா: ஆமணக்கு முத்து, குருக்குமுத்து, வேப்பமுத்து. இந்தியாவில் தொன்றுதொட்டு முத்திற்குச் சிறந்தது பாண்டிநாடு. |
| "வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து" |
என்றார் ஒளவையார். இடைக்கழகப் பாண்டியர் தலைநகராகிய கவாட புரத்தினின்று சென்ற முத்து, சாணக்கியர் பொருள்நூலிற் பாண்டிய கபாடம் எனப் பெயர்பெற்றது. |
இங்ஙன மிருக்கவும், முத்தம் என்னும் சொல்லை முக்த என்று திரித்து, சிப்பியினின்று விடுதலை பெற்றது என்று பொருட் கரணியங் கூறின், அறிவுடைய தமிழன் எவன் நம்புவான்? |
இனி, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் முழுக்குவதுபோல், தமிழ் அல்லது தமிழம் என்னும் சொல்லையே, த்ரமிள-த்ரமிட-த்ரவிட எனத் திரித்து ஆரியச் சொல்லாக்க முயல்பவர் வேறு என்னதான் செய்யார்? |
ஆங்கிலம் தமிழ்த் தூய்மை பேணலும் வடமொழி தமிழ் வழக்கு வீழ்த்தலும்: |
இந்தியா முழுவதையும் ஓராட்சிப்படுத்தற்கும், இந்தியர்க்கு அறிவியற் கல்வி புகட்டற்கும் ஆங்கிலர் ஆங்கிலத்தை ஆட்சிமொழி யாக்கினரேயன்றி, இந்திய மொழிகளைப் புறக்கணித்தற் கன்று. வேத ஆரியரோ, தம்மை நிலத்தேவர்(பூசுரர்) என்றும் தம் முன்னோர் மொழியைத் |