பக்கம் எண் :

14தமிழியற் கட்டுரைகள்

தேவமொழி என்றும் ஏமாற்றி, இந்திய நாகரிகமும் சிவ மால் மதங்களும் தமிழருடையவையாயும், தமிழ் திரவிடத் தாயும் ஆரிய மூலமுமாயும், இருந்தும், தமிழ் வழிபாட்டிற் குதவா மொழி எனத் தள்ளிவிட்டதனால், கடைக்கழகம் கலைந்தும் பண்டைத் தமிழ் நூல்களெல்லாம் அழிந்தும், ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் வளர்ச்சியற்றும், ஆயிரக் கணக்கான தென்சொற்கள் மறைந்தும் வழக்கு வீழ்ந்தும், போனதொடு, தமிழரும் தாழ்த்தப்பட்டும், பல்துறையில் பிழைப்பிழந்தும், உயர்நிலைக் கல்வியின்றியும், தன்மானமும் பகுத்தறிவும் நெஞ்சுரமும் குன்றியும், போயினர்.
     வழக்கு வீழ்ந்த தமிழ்ச்சொற்கு எடுத்துக்காட்டு:
     தென்சொல் வடசொல்
     அளியன் மைத்துனன்
     அறம் தருமம்
     ஆ, ஆவு, கோ பசு
     ஆசிரியன் உபாத்தியாயன்
     ஐயம் பிச்சை (பிக்ஷை)
     ஐயுறவு சந்தேகம்
     காருவா அமாவாசை
     பொழுதுவணங்கி
ஞாயிறு திரும்பி }
சூரியகாந்தி
     மதியம், முழுநிலா
வெள்ளுவா }
பௌரணை, பௌர்ணமி
     வலக்காரம் தந்திரம்
ஆங்கில வுறவு நெருக்கமும் வடமொழி யுறவுத் தொலைவும்:
     தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத் தமிழர் வடக்கே சென்று திரவிடராய்த் திரிந்தனர். அவருள் ஒரு சாரார் வடமேற்காய் ஐரோப்பா சென்று ஆரியராய் மாறினர். அவ் வாரியருள் ஒரு வகுப்பாரே நாவலந் தேயத்திற்குத் திரும்பிவந்த வேத ஆரியர். இவ் வரலாற்றைச் சில சொற்களும் அவற்றின் திரிபும் காட்டுகின்றன.
     எ-கா:
தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் வடமொழி
  அம்மை amma - - amba (அம்பா)
  இரு are, is es es as
  இரும்(பு) iron aer, aes - ayas
  காண் con, cna gno gno jna (ஜ்ஞா)
  கிழ - - geros jara (ஜரா)
  துளை thure - thura dwara (த்வார)
  நாவாய் - navis - nau