தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும் | 15 |
| தமிழ் | தியூத்தானியம் | இலத்தீனம் | கிரேக்கம் | வடமொழி | | பொறு | ber | port, fer | pher | bhar | | மன் | man | - | - | manu | | முழுகு | - | merg | - | majj | | முன்னு | mun | - | - | man | | மெது | smooth | - | - | mrudu | | வல் | - | val | - | bal | தியூத்தானியம் என்பது, ஆங்கிலம், செருமானியம், தச்சம் (Dutch), தேனியம் (Danish), ஐசுலாந்தியம் (Icelandic), முதலிய மேலை யைரோப்பிய மொழிகளைக்கொண்ட ஒரு கிளையாரியக் குடும்பமாகும். | உண்மை விடுதலை: | ஆங்கிலர் ஆட்சி நீங்கினதினால் மட்டும் தமிழன் விடுதலை யடைந்துவிட வில்லை. கீழையாரியமாகிய வடமொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ், விடுதலையடைந்து, முன்போல் மீண்டும் கோயில் வழிபாட்டு மொழியானாலொழிய, தமிழனுக்கு விடுதலையில்லை. உண்மையில் தேவமொழியென்று உலகில் ஒரு மொழியுமில்லை. அங்ஙனம் ஒன்று இருக்குமாயின், அது, கி. மு. ஐம்பதினாயிரம் ஆண்டுகட்குமுன் குமரிக்கண்டத்தில் தானே தோன்றியதாயும், வடமொழிக்கு மூலமாயுமுள்ள தமிழாய்த்தா னிருக்கமுடியும். | தமிழ்நாட்டில் விருதுநகர் சில வகையில் சிறந்த நகராகும். விருது என்பது, பட்டம், கொடி முதலிய வெற்றிச் சின்னங்களுள் ஒன்றைக் குறிக்கும் பெயர். நாடார் கோட்டைகளுள் நாயகமானது விருதுநகர். நாடார் என்பது, நாடான் என்னும் சொல்லின் உயர்வுப் பன்மையாய், நாட்டாண்மைக்காரனை அல்லது நாடாளியைக் குறிக்கும் பெயர். நாடன் - நாடான் - நாடார். | பேராயக் (Congress) கட்சியைச் சேர்ந்த திருவாளர் காமராசு நாடாரும், நேர்மைக் (Justice) கட்சியைச் சேர்ந்த திருவாளர் (V.V.) இராமசாமி நாடாரும், விருதுநகர்வாணர். இவருள், முன்னவர் ஆங்கில அடிமைத்தனத்தை அகற்றியவர்; பின்னவர் தமிழனின் உண்மை நிலைமையறிந்து ஆரிய அடிமைத்தனத்தையும் அகற்ற விரும்புகின்றவர். ஆதலால், அவர் தமிழர் அனைவராலும் பாராட்டப் பெறத்தக்கவராவர். இந் நிலவுலகில் அவர் நீடுவாழியாய் நின்று நிலவ, இறைவன் திருவருள் பொழிக. | - வே.வ. இராமசாமி பாராட்டு மலர் | | |
|
|