பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டக் கால்கோல் விழா வாழ்த்துரைவாழ்த்துரை விளக்கம்157

  குல் - குன் - குனி. குனிதல் = 1. வளைதல். "குனிவளர் சிலை" (சீவக. 486). 2. வணங்குதல். (சூடா.)
குன் - குனுகு = குனுகுதல் = சிரித்து உடல் வளைதல்.
குன் - கூன் = 1. வளைவு. "கூனிரும்பினிற் குறைத்து" (நைடத. நாட்டுப். 10). 2. உடற்கூனல். (திவா.). "கூனுங் குறளும்" (புறம்.28). 3. கூனன். (கூனி). "சிறுகுறுங் கூனும்" (சிலப். 27:214).
கூன் - கூனி = வளைந்த சிற்றிறால். "கூனிகொத்தி............. கொக்கிருக்கும் பண்ணை" (குற்றா. குற. 94).
கூனுதல் = 1. வளைதல். 2. முதுகு வளைந்துபோதல்.
கூன் - கூனை - மூலையிற் கூனுள்ள நீர்ச்சால்.
குலவு - குரவு - குரவை = சிறப்பு நாட்களிற் குறிஞ்சி அல்லது முல்லை நில மகளிர் எழுவர் அல்லது பன்னிருவர் வட்டமாக நின்று, பாடியாடிச் சுற்றிவருங் கூத்து... ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை. (சிலப்.)
குரவு-ஓ. நோ: L. curvo, E. curve, to bend.
குரவை-ஒ. நோ: Gk. choros, a dance in a ring.
E. ``chorus, n. (L. chorus, from Gk. koros, a dance in a ring, a chorus) 1. In the Greek drama, (a) originally a company of dancers dancing in a ring accompained by their own singing or that of others; a band of singers and dancers.''
E.``choir, n. (Written also quire, from O.Fr. choeur L. chorus, Gk. choros, a dance in a ring. a band) 1. a band of dancers. .......2. a collection of singers, especially in divine service, in a church......''

- The Imperial Dictionary of the English Language.

  குரவு - குரகு - குரங்கு, குரங்குதல் = வளைதல். "பாடினாள்...... இலைப்பொழில் குரங்கின" (சீவக. 657).
  குரங்கு - 1. வளைவு. "குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து" (சிலப். 10 : 157), 2. கொக்கி.
  குரங்கு - ஒ.நோ: E. crank.
  குலு - குரு - குருகு = 1. வளையல், "கைகுவி பிடித்துக் குருகணி செறித்த" (கல்லா. 44:22). 2. வளைந்த கழுத்துள்ள நீர்ப் பறவை நாரை. "வான்பறைக் குருகி னெடுவரி பொற்ப" (பதிற்றுப். 83:2). 3. நாரை வடிவொத்த கொல்லுலைத் துருத்தி. "ஊதுலைக் குருகி னுயிர்த்தனர்" (சிலப். 4:59). 4. ஓதிமம் (அன்னம்). "நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து" (நாலடி. 135). 5. அன்றில். "குருகு பெயர்க் குன்றம்" (மணி. 5:13).