தமிழும் திரவிடமும் சமமா? | 23 |
".......... இடைச் சங்கமிருந்தார் ........... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக் காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது." | (இறையனாரகப் பொருள், 1, உரை) | "முதலூழி யிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து......... அக் காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னு மாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்குமிடையே ஏழு நூற்றுக் காவதவாறும், இவற்றின்நீர் மலி வானென மலிந்த......... நாற்பத் தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலால்" | - (சிலப். 8 :1, அடியார்க்கு நல்லார் உரை) | இக் குறிப்புகள், தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் முழுகிப் போன குமரிக் கண்டம் என்பதைக் காட்டுகின்றன. மாந்தன் தோன்றிய இடமும் குமரிக் கண்டமே. அது பனிமலை (இமயம்) கடலுக்குள்ளிருந்த காலத்தும் கழி முதுநிலமாயிருந்த கணிப்பருந் தொன்மை வாய்ந்தது. அடியார்க்கு நல்லார் பெயருடன் குறித்துள்ள ஏழேழ் நாடும் வரலாற் றுண்மையே யன்றிக் கட்டுச் செய்தியன்று. | திருவாங்கூர் (திருவதங்கோடு) நாட்டில் உள்ள பறளியாறே பண்டைத் தமிழிலக்கியத்திற் குறிக்கப்பட்ட பஃறுளியென்பது, தமிழ்ப் பகைவர் கூற்றென்று விடுக்க. | இனி, | "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி" | | (883) | என்னும் தொல்காப்பிய நூற்பா, ஆரியத்தொடு கலந்து திரவிடமாய் மாறிய கொடுந் தமிழ்த் தோற்றத்தை யுணர்த்தும். | 2. ஆரியத் தொடர்பற்ற இலக்கியம் | இறந்துபட்ட முது நாரை, முது குருகு, களரியா விரை, வெண்டாளி, வியாழமாலை யகவல், இசை நுணுக்கம், சிற்றிசை பேரிசை, முறுவல், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் முதலிய எண்ணிறந்த தொன்னூல்களும்; ஏரணம் (Logic), உருவம் (sculpture), ஊழ்கம் (யோகம்), இசை, நாடகம், கணக்கு, பொன்னாக்கம், (Alchemy), கண்கட்டி (சாலம்), வசியம் (Enchantment), சூனியம் (Witchcraft), மறம் (போர்) மல்லம் (Wrestling), யானை நூல், குதிரை நூல், நீர் நூல், நில நூல், பொருள் நூல் (Economics), அரசியல் நூல் (Politics), கட்டட நூல் (Architecture), ஓவியம், கணியம் (Astrology) கோள் நூல் (Astronomy), மறை நூல் (Scripture), மந்திர நூல் (Mystic Philosophy), மருத்துவம், மடை நூல் (Cookery) புதையல் நூல் | | |
|
|