பக்கம் எண் :

தமிழும் திரவிடமும் சமமா?25

7. மொழித் தூய்மை
     தமிழ், பல்லாயிரக்கணக்கான இலக்கியச் சொல்லும் உலகியற் சொல்லும் இறந்துபட்டுள்ள இக் காலத்தும், எள்ளளவும் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்கவும் தழைத்தோங்கவும் வல்லது. திரவிட மொழிகட்கோ வடமொழித் துணை இன்றியமையாதது.
8. சொற்களின் இயனிலைமை
     தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் முந்திய இயனிலையிலும் திரவிடச் சொற்கள் பெரும்பாலும் பிந்திய திரிநிலையிலுமே உள்ளன. இதை ஓரரிசிப் பதமாகத் தெலுங்கினின்று எடுத்துக்காட்டுவோம்.
1. மூவிடப் பெயர்
      தமிழ்தெலுங்கு
 தன்மை :ஏன்-யான்-நான்நேனு
    ஏம்-யாம்மேமு
   நாம்மனமு
 முன்னிலை:நீன்-நீநீவு
    நீம், நீயிர்-நீவிர்-நீர் மீரு
  படர்க்கை :அவன்வாடு
    அவள் ஆமெ
     அவர்வாரு
    அது, அவள் அதி
     அவைஅவி
     2. 'ஆகு' என்னும் வினைப் புடைபெயர்ச்சி
     தமிழ்தெலுங்கு
 பகுதி :ஆ, ஆகு அவு
  ஏவலொருமை :ஆ, ஆகு கா
  ஏவற்பன்மை : ஆகும், ஆகுங்கள் கம்மு, கண்டி
  (படர்க்கை) ஆண்பால்      
  இ. கா. முற்று : ஆயினான் அயினாடு
  இ. கா. பெயரெச்சம் : ஆன, ஆயின அயின, ஐன
  இ. கா. வினையெச்சம் : ஆய், ஆகி அயி, ஐ
  நி. கா. வினையெச்சம் : ஆக கா, அவ
  எ. கா. வினையெச்சம் : ஆயிற்றேல் அயித்தே
  (படர்க்கை) ஒன்றன் பால்      
  எ. கா. முற்று : ஆகும் - ஆம் அவுனு
  உடன்பாட்டிடைச் சொல் :ஆம் அவுனு