| | | தமிழ் | தெலுங்கு | | ஒன்றன் பால் | | | | | எதிர்மறை முற்று | : | ஆகாது | காது | | தொழிற் பெயர் | : | ஆதல், ஆகுதல் | அவுட்ட, காவடமு | 3. சில பொதுவகைச் சொற்கள் | | தமிழ் | தெலுங்கு | | சுருட்டு | சுட்ட | | திருத்து | தித்து | | பருப்பு | பப்பு | | மருந்து | மந்து | 9. சொல்வளம் | மலையாளத்தில் வழங்கும் வீடு என்னும் சொல்லும், கன்னடத்தில் வழங்கும் மனை என்னும் சொல்லும். தெலுங்கில் வழங்கும் இல்(லு) என்னும் சொல்லும், தமிழுக்குரிய ஒரு பொருட் பல சொற்களாம். | ஆய், இளை, எழிலி, கார், காளம், குயின், கொண்டல், கொண்மு, செல், பெயல், மங்குல், மஞ்சு, மால், முகில், மை என்பன மேகத்தைக் குறிக்கும் வேறுபட்ட நுண் பொருட் சொற்களாம். இத்தகைய சொல் வளத்தை எத் திரவிட மொழிகளிலும் காணவியலாது. | 10. முத்தமிழ்ப் பாகுபாடு | தொன்றுதொட்டு வழங்கிவரும் இயலிசை நாடகமென்னும் முத்தமிழ்ப் பாகுபாடும் திரவிட மொழிகட்கில்லை. | பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாண்டிய வேந்தர் போற்றிப் புரந்த முத்தமிழ், முத்தமிழ்க் கழக நல்லிசைப் புலவர், நலமுற நாடி யாய்ந்த நன்மொழி, பிற மொழிகட்கில்லாத தொன்மையும் முன்மையும், தென்மை யும் மென்மையும், இளமையும் வளமையும் எண்மையும் ஒண்மையும், தாய்மையும் தூய்மையும், செம்மையும், மும்மையும், பெருமையும், திருமையும், முதுமையும், புதுமையும் தாங்கி நின்றும், திரவிட மொழிகளுள் ஒன்றாக எளிவந்தும் இழிவந்தும் இருப்பது எத்துணை இரங்கத்தக்கது! | | "கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து எண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ" | என்னும் பரஞ்சோதி முனிவர் பாடலையேனுங் கண்டு உண்மை தெளிக. | - தென்மொழி | | |
|
|