கொடுந்தமிழ் நிலங்கள் பன்னிரண்டாகக் கணக்கிடப்பட்டன. |
| "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி." | (தொல். எச். 4.) |
தொல்காப்பியர் காலத்துப் பன்னிரு கொடுந்தமிழ் நிலம் எவை யென்பது திட்டமாகத் தெரியவில்லை. |
| "தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றி யருவா அதன்வடக்கு-நன்றாய சீதம் மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்" | |
| "சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம் கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே." | |
என்னும் பிற்காலத்துப் பாடல்களும், அவற்றைத் தழுவிய |
| "செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப" | (நன். 273) |
என்னும் நன்னூல் நூற்பாவும், கொள்ளத்தக்கன வல்ல. அவற்றால் அறியக் கிடப்பதெல்லாம், ஒருகாலத்தில் இலங்கையுட்பட இந்தியா முழுதும் தமிழே வழங்கிற்று என்பதே. |
செந்தமிழ் வரம்பீட்டின் நன்மை |
1. மொழிகெடாமை |
குமரிநாட்டு மொழியாகிய தமிழ் ஒன்றே, இன்று பல்வேறு வகையில் திரிந்து பதினெண் மொழியாகப் பிரிந்துள்ளது. |
எ-கா : |