சொற்கள் வேர்ப்பொருள் காட்டினால்தான் மொழிவரலாற்றை அறியமுடியும். தமிழ் ஒன்றே இயன்மொழியாதலின், மொழிவரலாற்றுத் திறவுகோல் அதிலேயே ஆழப் புதைந்து கிடக்கின்றது. |
6. அழகுடைமை |
"கல்விக்கழகு கசடற மொழிதல்" ஓதிம (அன்ன) நடையினும் மாதர் நடையினும் உயர்ந்த அழகுள்ளது, மறைமலையடிகள் நடையாகிய செந்தமிழ் நடை. |
மேலையர், இந்தைரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு மூலமான தமிழை அடிப்படையாகக் கொள்ளாது ஆரியத்தையே கொண்டாராய்ந்து, கோட்டைச் சுவரில் முட்டிய குருடர்போல் இடர்ப்பட்டு, தாய்மொழியும் கிளைமொழியும் என்னும் முறைமையின்றி, தனியாள் நடைமொழி (personal dialect), குழு நடைமொழி (group dialect), வகுப்பு நடைமொழி (communal or class dialect), தொழில் நடைமொழி (professional dialect), இட நடைமொழி (local dialect), வட்டார நடைமொழி (regional dialect) என ஒவ்வொரு பெருமொழியையும் பல நடைமொழிகளாகப் பகுத்து, ஆராய்ந்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். |
சிலர் உலக வழக்கிற்கும் (colloquial dialect) கொச்சை வழக்கிற்கும் (slang usage) வேறுபாடு தெரியாது, பேச்சு மொழியையும் கவனித்தல் வேண்டுமென்று சொல்லி வருகின்றனர். தமிழில் உயர்ந்தோர் பேச்சு வழக்கே உலக வழக்காம். |
| "வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான" | (தொல். மரபியல். 93) |
என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. எல்லா வகையிலும், மேன்மக்கள் நடையையே கீழ்மக்கள் பின்பற்றல் வேண்டும். கீழ்மக்கள் பேச்சை ஒப்புக் கொள்ளவேண்டுமெனின், கீழ்மக்கள் ஒழுக்கத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அங்ஙனங் கொள்ளின், ஆட்சியும் காவலும் வழக்குத் தீர்ப்பும் குற்றத் தண்டனையும் வேண்டியதேயில்லை. |
"கருத்தறிவிப்புத் தானே மொழியின் பயன்! எந்நடையிற் பேசினா லென்ன?" என்பர் சிலர். அது, "பசியைப் போக்குவதுதானே உணவின் பயன்! எங்ஙனம் (பல்துலக்காதும் குளியாதும் அடுகலத்திற்குள் கையிட்டும்) உண்டாலென்ன?" என்று வினவுவது போன்றிருக்கின்றது. ஆறறிவு படைத்த |