அசுரர் யார்? | புராணங்களிலும் புராணச் செய்தி குறிக்கும் இலக்கியங்களிலும் அசுரர் என்னும் வகுப்பாரைப்பற்றி அடிக்கடி படிக்கின்றோம். அவருள் கயமுகாசுரன், சம்பராசுரன், தாரகாசுரன், நரகாசுரன், பகாசுரன், விருத்திராசுரன், முதலிய சிலர் மிகப் பெயர் பெற்றவர். அசுரரெல்லாரும். இயல்பாக மிகக் கொடியவரென்றே கூறப்படுகின்றனர். | இவ் வசுரர் யார்? சுரர் என்னும் தேவருக்கும் பகைவர் என்றும், விசும்பில் (ஆகாயத்தில்) இயங்கக்கூடிய பதினெண் கணத்தாருள் ஒரு கணத்தார் கூட்டத்தார் என்றும் அரக்கரைப்போலக் கொடியவரென்றும், பண்டைநாளில் இந்தியா முழுவதும் இருந்தவரென்றும், அடியார் முறையீட்டின்பின் அவ்வப்போது சிவனால் அல்லது திருமாலால் அழிக்கப் பட்டவரென்றும், புராணங் கூறும். சுரையென்னும் அமுதத்தை உண்டவர் சுரர் என்றும், அதை உண்ணப்பெறாதவர் அசுரர் என்றும், பெயர்க் காரணம் காட்டப் பெறும். அசுரர்க்கு அவுணர், தாணவர் என்ற பெயருமுண்டு, அசுரர் "a class of demons at war with the gods" என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி கூறும். | அசுரர் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டவரும், மக்களினத்திலின்று வேறுபட்டவருமான ஒரு கொடிய வகுப்பினரென்றே புராணங்களும் இதிகாசங்களும் ஒருமிக்கக் கூறினும், ஆராய்ந்து பார்ப்பின், அவர் தமிழரின் அல்லது திராவிடரின் முன்னோரே யென்பதும், அத்துணைக் கொடியவ ரல்லர் என்பதும் வெளியாகும். | அசுரர் வடநாட்டில் மட்டுமன்றித் தென்னாட்டிலும் இருந்திருக் கின்றனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பேரூர்ப் புராணமும் அங்கு முற்காலத் தில் ஓர் அசுரன் அல்லது அரக்கன் இருந்து ஆண்டதாகவே கூறுகின்றது. தஞ்சையில் தஞ்சன் என்னும் அரக்கனும், திருச்சியில் திருசிரன் னென்னும் அரக்கனும் மன்றெச்ச நல்லூரில் மண்ணரக்கன் என்பவனும் பிற நகரங்களில் பிற வரக்கரும், முதற்காலத்தில் ஆண்டனர் என்பது புராண கதை, அசுரரும் அரக்கரும் வெவ்வேறினத்தாராகப் பதினெண்கணப் பாட்டுகளிற் கூறபட்டிருப்பினும், இயலிலும் செயலிலும் ஒன்றுபட்ட வராகவே காட்டப்படுகின்றனர். மேலும் அவ் விரு வகுப்பார்க்கும் ஒருவரே | | |
|
|