கண்ணகியும் பூதப்பாண்டியன் றேவியும் போன்ற மெல்லியலார் தம் கணவரிறந்தவுடன் உயிரைத் துறவாது வேறென் செய்வர்? ஆயினும், புலவரெல்லாம் தம் நண்பரிறந்தால் உயிர்விடுவா ரல்லர்; அதுபோன்று கற்புடைய மனைவியாரெல்லாம் தம் கணவ ரிறந்தபின் உயிர்விடுவா ரல்லர். ஈரிடத்தும் உயிர் விடுவதற்குக் காரணம், உணர்ச்சி மிகுதியே. அஃதுள்வழி போற்றப் படினும், இல்வழி இகழப்படாது. |