பக்கம் எண் :

உரையாசிரியர்கள்532

     தமிழகம் எங்கும் பயணம் செய்து சைவ ஒளி பரப்பினார்;
தமிழ்த்தொண்டு ஆற்றினார். அங்கங்கே இவருக்கு அடியவர்களும்
மாணவர்களும் அன்பர்களும் தொண்டர்களும் தோன்றினர்.

     திருவாவடு துறையிலும் காஞ்சிமாநகரத்திலும் தங்கி இவர் ஆற்றிய
தொண்டுகள் பல. அவ்விரு இடங்களிலும் சில ஆண்டுகள் தங்கி, பல
உரைகளையும் மறுப்பு நூல்களையும்
இயற்றினார். அவ்விரு இடங்களிலும்
இவர்பால் கற்ற மாணவர்களில் திருத்தணிகைக் கச்சியப்ப முனிவர்,
தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

     தொண்டுகள் பலவற்றை இடையறாது ஆற்றிவந்த இவர் 1785-ஆம்
ஆண்டு (சித்திரைத் திங்கள் 8-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை) இறைவனடி
சேர்ந்தார்.

     சிவஞான முனிவர் இயற்றிய உரைநூல்களும் கண்டன நூல்களும் கீழே
தரப்படுகின்றன:

உரைநூல்கள்

     தொல்காப்பியச் சூத்திர விருத்தி

     நன்னூல் விருத்தியுரை

     சிவஞான பாடியம்

     சிவஞான போதச் சிற்றுரை

     சிவஞான சித்தியார் (சுபக்கம்) பொழிப்புரை

     கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி

மறுப்புரைகள்

     இலக்கண விளக்கச் சூறாவளி

     சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம்

     சிவ சமய வாதவுரை மறுப்பு

     எடுத்து என்னும் சொல்லுக்கு இட்ட வயிரக் குப்பாயம்.

இலக்கண ஆராய்ச்சியும் விளக்கமும்

    சிவஞான முனிவர் இலக்கண ஆராய்ச்சியில் வல்லவர்: ஆராய்ந்த
கருத்துக்களைத் தெளிவாக விளக்குபவர். இவர் ஆராய்ந்து விளக்கும்
இடங்கள் சிலவற்றைக் காண்போம்:

நால்வகைச் சொல்

    “பொருள் உணர்த்தும்சொல் பெயர்ச் சொல் எனவும், குணப்பண்பும்
தொழிற்பண்பும் ஆகிய பொருட்பண்பை உணர்த்தும் சொல் உரிச் சொல்
எனவும், பொருட் புடைபெயர்ச்சி யாகிய தொழிற்பண்பின் காரியத்தை
உணர்த்தும் சொல்