விலைவரம்பில்லாப் பொருள் மணிக் குவியல்களை யாம் எங்ஙனம் பெறுதல் கூடும்?”2 3. செ. வேங்கடராமச் செட்டியார் “மூல நூல்களுக்கு உள்ள பெருமை, உரைகளுக்கும் உண்டு. சில மூல நூல்கள் உரைநூல்களாலேயே பெருமை அடைந்துள்ளன என்னலாம். உரைநூல்கள் இல்லையேல், சிலமூல நூல்கள் விளக்கம் பெறாமல் மறைந்து போய் இருத்தலும் கூடும். இதை உளங் கொண்டு நோக்கினால், மூல நூல்களை மக்களிடையே மதிப்புடன் வாழச் செய்யும் பெருமை உரைநூல்களுக்கே உண்டு என்பது புலனாகும்”3 4. மு. அருணாசலம் “பழைய இலக்கிய இலக்கணங்கள், இன்றைய பொதுமாந்தர் புரிந்து கொள்ளும் எல்லைக்கு அப்பாற் போய் விட்டவை. அப்படியே மொழியை உணர்ந்து கொண்டாலும், மொழியில் அடங்கிய நோக்கங்களையும் மரபுகளையும் குறிப்புகளையும் முற்ற உணர்ந்து கொள்வது மிகக் கடினம். இக் கடின நிலையை மாற்றி, பண்டைய நூல்களை எளிதாக உணர்ந்து கொள்ள வழி அமைத்தவர்கள் பண்டைய உரையாசிரியர்களே”4 நால்வகைப் பிரிவுகள் இவ்வாறு அறிஞர் பெருமக்களின் போற்றுதலைப் பெற்றுள்ள உரையாசிரியர்களின் உரைகளைப் பெற்று இன்றும் வாழ்ந்து வருகின்ற தமிழ் நூல்களை எல்லாம் நான்கு பிரிவிற்குள் அடக்கலாம். அவை, 1. இலக்கியம் 3. தத்துவம் 2. இலக்கணம் 4. கலை என்பன. இலக்கியம், இலக்கணம் ஆகிய இருபெரும் பிரிவுகளிலும் மிகுதியான நூல்கள் இடம் பெறுகின்றன. அவற்றிற்கு உரைகளும் மிகுதியாகத் தோன்றியுள்ளன. தத்துவம், கலை ஆகிய பிரிவுகளில் மிகுதியான நூல்களும் இல்லை; உரைகளும் இல்லை ! சிலவகை நூல்களை எந்தப் பிரிவின் கீழ் அடக்குவது என்ற சிக்கலான வினா எழுகின்றது நீதி நூல்கள், சித்தர்பாடல்கள் 2. உரைநடைக் கோவை ; பக்கம் - 26. 3. உரையாசிரியர்கள் (1968) - அறிமுகம். 4. 13ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு, பக்கம் - 145. |