பக்கம் எண் :

53பாயிரம்

     தோன்றிய காலத்தில் புகழுடன் விளங்கிய சில நூல்கள், பின்னர்
ஏற்பட்ட அரசியல் மாற்றம், சமயப் போராட்டம், பிற மொழித் தாக்கம்
ஆகியவற்றால் செல்வாக்கு இழந்துள்ளன.

     இலக்கிய மரபும் இலக்கணக் கோட்பாடும் மாறியதால் சில நூல்கள்
தமக்குரிய இடத்தை இழந்து பின்தங்கியுள்ளன.

     தமிழ் மொழியில் பழையன கழிந்து புதியன புகுந்து, பழஞ்சொற்களின்
பொருள் மாறியதால் சில நூல்கள் விளங்காத நிலையை அடைந்து கால
ஓட்டத்தைவிட்டு ஒதுங்கியுள்ளன.

     அயல் நாகரிகத்தை ஏற்றுக் கொண்ட மக்களின் புதுமை நாட்டத்தால்
சில நூல்கள் கால இருளில் மறைந்துள்ளன.

     இவ்வாறு தமிழ் நூல்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வந்துள்ள தடை,
எதிர்ப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றை அகற்றி அந்த நூல்களுக்கு வாழ்வு
தந்து போற்ற - அவை இழந்த விட்ட செல்வாக்கை மீட்டுத் தர-அவற்றிற்கு
உரிய இடங்களில் அவற்றை மீண்டும் அமர்த்த - காலந்தோறும் அவை
விளங்கும் தன்மையைப் பெற - ஓட்டத்தோடு நீந்தி அவை கரையேற - கால
இருளை விட்டு வெளிச்சத்திற்கு வர உரையாசிரியர்கள் அரும்பாடுபட்டனர்.

     உரையாசிரியர்கள் தமிழ் மொழியைக் காத்து, தமிழினத்தின் அரசியல்,
சமயம், கலை, பண்பாடு ஆகியவற்றின் நிலையான வாழ்விற்கு உறுதுணையாய்
இருந்தனர் என்பதைத் தமிழறிஞர்கள் நினைவூட்டியுள்ளனர். அவற்றுள் சில,
கீழே தரப்படுகின்றன.

1. டாக்டர் உ.வே. சாமிநாதஐயர்

    “பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் வழங்கி வந்து இடையிலே
மறக்கப்பெற்ற நூல்களில் உள்ள பொருள்களை உள்ளபடியே அறிய
வேண்டுமானால், அந்நூல்கள் இயற்றப் பெற்ற காலத்து நிலைமையையும்,
இலக்கிய மரபையும் நன்றாக உணர்ந்து கொள்வது, இவ்வளவு காலத்திற்குப்
பின் வந்த நம்மால் இயலாதது.

     நமக்கு உதவி செய்ய உரையாசிரியர்கள் உள்ளனர் !”1

2. பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்

    “நூலாசிரியரின் அரிய கருத்துகளை எல்லாம் உரையாளர்
உதவியாலேயே உலகம் உணர்ந்து இன்புறுகின்றது. பேருபகாரிகளாகிய
உரையாசிரியர்களின் உதவி இல்லையாயின், பண்டை உயர் நூல்களாம்
கருவூலங்களில் தொகுத்துவைத்த


     1. என் சரித்திரம், பக்கம் - 840.