1. உரையின் தோற்றமும் வளர்ச்சியும் தமிழ் மொழி இலக்கிய வளம் மிகுந்தது; இலக்கண வரம்புடன் வளர்ந்து வரும் இயல்புடையது. சங்கம் வைத்து மொழி வளர்த்த வேந்தர்களும், காலவெள்ளத்தை எதிர்த்து நீந்தி என்றும் வாழும் இலக்கியச் செல்வங்களைப் படைத்து வழங்கிய புலவர்களும் காலந்தோறும் தோன்றி, தமிழ் மொழியைக் காத்து வளர்த்தனர். இத்தகைய சிறப்பியல்புகளை உடைய தமிழ் மொழியை, பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே வளர்ந்து, சங்கத்(து) இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்(து)ஓர் ஏன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள்1 என்று புலவர் பெருமக்கள் வாயாரப் போற்றிப் புகழ்ந்தனர்; இலக்கண வரம்புடன் வளர்ந்துவரும் தமிழ் மொழியின் செம்மையை, கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ(டு) அமர்ந்து, பண்ணு றத்தெரிந்(து) ஆய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ 2 என்று போற்றினர். நூல் அரங்கேற்றம் தமிழகத்தில் தோன்றிய சான்றோர்கள் உலகத்தை வாழவைக்கும் உயர்ந்த நோக்கத்துடன், மக்களினம் இன்புற்று வாழ வழிகாட்டும் கொள்கையுடன் இலக்கியம் படைத்தனர்; இலக்கணம் வகுத்தனர்; சமய நூல்கள் இயற்றினர். தம் படைப்பினை நாடறிந்த பேரவையின் முன்வைத்து, நன்மை 1. வில்லி பாரதம் - சிறப்புப்பாயிரம் 2., திருவிளையாடற் புராணம் (பரஞ்சோதியார்) நாட்டுச் சிறப்பு-57. |