பக்கம் எண் :

உரையாசிரியர்கள்766

     (3) அவர், தாம் பதிப்பித்த ஒழிவிலொடுக்க உரையிலே

          (திருத்தம்)                (பிழை)

     சுழு முனையை       - சுழி முனை என்றும்,
     சொர்ப்பனத்தை       - சொற்பனம் என்றும்,
     ஞாதிருவை          - ஞாதுரு என்றும்
     கேட்க என்பதை      - கேழ்க்க என்றும்
     சரியையை           - சரிதை என்றும்
     பிராரத்தத்தை        - பிராரத்துவம் என்றும்,

     தோன்றிய விருது காலம் என்பதை -
              தோன்றப்பட்ட விருது காலம் என்றும்,

     நூல் கேட்டலை - நூற்கேட்டல் என்றும்,
     அழியுமித்தேகாதி என்பதை -
              அழியப்பட்ட வித் தேகாதி என்றும்,

     ‘மண்ணினின்றும் கடகல சாதி காரியங்கள்’
          என்பதில் ‘மண்ணினின்று’ என்பதை - ‘மண்ணை’

          என்றும்,

     நூல்கள் அறிவிக்க மாட்டா என்பதை - நூல்கள்
          அறிவிக்க மாட்டாது என்றும்,

     மகேசுரனை - மயேசுரன் என்றும்,
     இச்சாயத்தினத்தை - இச்சா யெத்தினம் என்றும்,
     அத்தசமயனத்தை-அத்தமானம் என்றும்,
     அவைகள் அறியா என்பதை - அவைகள் அறியாது
                                           என்றும்,

     ‘இச்சா ஞானம் முதலிய வருவிக்கப்பட்டன’
     என்பதில் ‘பட்டன’ என்பதை - பட்டது என்றும்,
     போய இடத்து ஆன்மா என்பதை - போய
                        இடத்து வான்மா என்றும்,

     பெத்த தசையை - பெத்ததிசை என்றும்,
     வர்ணத்தை - வர்ந்நம் என்றும்,
     கதிரவனுக்கு அசுத்தமும் இன்றாயது என்பதை - கதிர
                   வனுக்கும் சுத்தமும் இன்றாயது என்றும்,

     நேதி களைதலை - நியதி களைதல் என்றும்,
     வெதுப்புதலை - வெதிப்புதல் என்றும்,
     உற்பிச்சத்தை - உற்பீசம் என்றும்,
     தொடையை - துடை என்றும்,
     மித்தியா ரூபத்தை - மித்தையா ரூபம் என்றும்,
     ஆக என்னும் வினையெச்சங்களை - ஆய் என்றும்

பதிப்பித்து இருக்கின்றாரே!

     (4) அப் புத்தகத்தில், பல இடங்களில் பெயரெச்சங்களை முற்று எனக்
கொண்டு, முற்றுக் குறி கொடுத்து வரி முடிவு செய்து,