"ஏராளமான பணம் செலவு செய்து கட்டடங்கள் கட்ட வேண்டிய
அவசியமுமில்லை."
தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல்
தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்.
இந்த விஷயத்தை ரவீந்தரநாத் தாகூர், அன்னிபெஸன்ட், நீதிபதி மணி
அய்யர் முதலிய ஞானிகள் அங்கீகரித்து, நம்நாட்டில் தேசீயக்கல்வி
முறையைப் பரப்புதற்குரிய தீவிரமான முயற்சிகள் செய்கின்றனர். ஆதலால்,
இதில் சிறிதேனும் அசிரத்தை பாராட்டாமல், நமது தேச முழுவதும், ஒவ்வொரு
கிராமத்திலும் மேற்கூறியபடி பாடசாலைகள் வைக்க முயலுதல் நம்முடைய
ஜனங்களின் முதற்கடமையாம்.
"அ...ன்"
மேலே காட்டிய குறியின் பொருள் யாது?
தமிழ் நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு
அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ்
பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.
ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்யவேண்டும். பாடசாலைகள்
ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ் மொழி வாயிலாகக் கற்பிக்
கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல
வேண்டும். 'ஸ்லேட்", "பென்ஸில்" என்று சொல்லக்கூடாது.
பிரிட்டிஷார் இந்திய சமுதாயத்தின்மீது திணித்த ஆங்கிலக் கல்வி
முறையை எதிர்த்தும், தேசியக் கல்வி முறையை ஆதரித்தும் காங்கிரஸ்
மகாசபை அதிகாரபூர்வமாக தீர்மானம் நிறைவேற்றியது. அரசியல் கட்சிகளும்
அரசியல் வாதிகளும் கல்வியில் தலையிடக் கூடாதென்று இன்று கூறப்படுகிறது.
பழைய தேசிய பாரம்பர்யத்தைச் சார்ந்தவர்களிலேயும் பலர் இப்படிக்
கூறுகின்றனர். நாடு பெற்ற அரசியல் விடுதலையிலே இந்திய மொழிகளின்
விடுதலை அடங்கியிருக்கவில்லை என்பதனை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.
மற்றும், ஒத்துழையாமைக் கிளர்ச்சிக் காலந்தொட்டு, இந்திய தேசியவாதிகள் கல்வித்துறையில் தலையிட்டு - இந்தியமொழிகளுக்கு ஆங்கில