ஆதிக்கத்திலிருந்து விடுதலை தேட நடத்திவந்த கிளர்ச்சியின் தொடர்ச்சிதான்
இன்று நாட்டில் நடைபெறும் போதனா மொழிக் கிளர்ச்சியென்பதனையும்
மறந்து விடுகின்றனர். கல்வியின் எல்லாக் கட்டங்களிலும் பிரதேச மொழியே எல்லாப்
பாடங்களுக்கும் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்பது தேசியக்
கல்வியின் உயிர்நாடியாகும். காந்திஜி இதில் மிகவும் உறுதி காட்டி வந்தார்.
"பள்ளிக்கூடம் என்பது, வீட்டைப் போலவே மற்றொரு வீடாக இருக்க
வேண்டும். ஒரு குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும்,
பள்ளிக்கூடத்தில் ஏற்படும் எண்ணங்களுக்கும் இடையே நெருங்கிய இணக்கம்
இருக்க வேண்டும். சிறந்த பலன் ஏற்படவேண்டுமாயின் அத்தகைய இணக்கம்
தேவை. அறிமுகமில்லாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பிப்பது இந்த
இணக்கத்தைக் குலைத்துவிடுகிறது. இந்த இணக்கமான உறவைக்
குலைப்பவர்கள் நல்லெண்ணத்துடன் காரியங்களைச் செய்பவர்களாக
இருந்தாலும் அவர்கள் மக்களுடைய பகைவர்களேயாவர். தன்னிச்சையாக
இந்தக் கல்வி முறைக்கு உட்படுவது நம்முடைய தாய் மொழிக்கு நாம்
ஆற்றவேண்டிய கடமையைச் செய்யாமல் துரோகம் செய்தது போலாகும்."1
வெளியேறு!
ஒத்துழையாமை இயக்கத்தின்போது அரசாங்கத்தினரால் நடத்தப்பட்ட
கல்வி நிறுவனங்களிலிருந்து-குறிப்பாக கல்லூரிகளிலிருந்து வெளியேறுமாறு
தாய்நாட்டின் பெயராலும் தாய்மொழியின் பெயராலும் மாணவர்களுக்கு
அழைப்புவிடுத்தார் காந்தியடிகள். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றுமுடைய
ஆயிரமாயிரம் மாணவர்கள் - தங்களுடைய எதிர்காலத்தைப் பயங்கர
சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு கல்லூரிகளிலிருந்து வெளியேறினர்.
அடிகளார் விடுத்த அழைப்பு வருமாறு:
"இந்திய இளைஞர்கள் ஆங்கிலத்தின் மூலம் கல்வி கற்கும்
இடங்களில் தான் நம்முடைய அடிமைத்தனம் என்ற சங்கிலியின்
முதல் கரணை பூட்டப்படுகிறது. இவற்றுக்குச் சமமான
1. பாரதி நூல்கள் - கட்டுரைகள்; பக்.498.